திருமூலர் திருமந்திரம் உரை எண் 12 ன் விளக்கம்:

ஸ்ரீ குருப்யோ நமஹ🙏
“கண்ணுத லான்ஒரு காதலின் நிற்கவும் எண்இலி தேவர் இறந்தார் எனப்பலர் மண்உறு வார்களும் வான்உறு வார்களும்
அண்ணல் இவன்என்று அறியகில் லார்களே”.

கண்ணுத லான் என்பதற்கு நெற்றிக்கண்ணை உடையவன் என்று பொருள்.
தம் அண்ணலை, தம் நெற்றிக்கு நேரே உள்ள வெற்றிடத்தில் நிறைந்த ஒளியாக காதலினால் கசிய, கொண்டு வந்து,  தன் கண்ணீர் மல்க நின்றால், “நெற்றிக்கு நேரே நிறைந்த ஒளி காணில் முற்றும் அழியாது உடம்பு” என்னும் ஔவை குரலுக்கு ஏற்ப, அத் தேகத்தில் குடி கொண்டிருக்கும் மண்உறு வார்களும், வான்உறு வார்களும் மரணம் இல்லா பெருவாழ்வை பெற்று பயன் அடைவார்கள்.

ஆனால் மண்ணால் ஆன தேகத்தில் குடி கொண்டிருக்கும் எண்ணற்ற உயிர் அணுக்களும், இடையிடையே உள்ள அற்றது எனப்படும் வெற்றிடத்தில் உள்ள எண்ணற்ற தேவர்களும், ஜோதி வடிவாக இருக்கும் அண்ணலை, தம் நெற்றிக்கு கொண்டுவந்து காணும் வழி தெரியாமல்  இறந்து கொண்டிருக்கிறார்கள்.
திருச்சிற்றம்பலம்🙏

Leave a comment