திருமூலர் திருமந்திரம் உரை எண் 11ன் விளக்கம்:

ஸ்ரீ குருப்யோ நமஹ🙏
“அயலும் புடையும்எம் ஆதியை நோக்கில் இயலும் பெருந்தெய்வம் யாதுமொன் றில்லை
முயலும் முயலில் முடிவுமற்று ஆங்கே  பெயலும் மழைமுகில் பேர்நந்தி தானே”.


அயலும்- பக்கத்திலும், புடையும்-  சுற்றிலும், எம் ஆதியை-என் பிறப்பிற்கு மூலமான ஆதியாய் விளங்கும் என் உயிர் வித்துவை,
அதாவது எம் ஆதியான வித்துவுக்கு பக்கத்தில் உள்ள வாசியும் , (மெய் வாய் கண் காது மூக்கு) என்னும் ஐம்புலன்களின் புடையால் சூழப்பட்ட என் தேகமும், ஒன்றாகக் கூடி எம் ஆதியை நோக்கும் போது வெளிப்படும் பெருந்தெய்வம் போன்ற இறைவன் வெளியில் எங்கும் இல்லை.
அவனை அடைய, அவன் அருளைப் பெற ஆன்மாக்கள் முயலும் முயற்சிகளிலும், அதன் முடிவிலும், மற்றும் அதன் பயன்களிலும், அவன் அருளே வெளிப்பட்ட , அவன் பருவத்தே பெய்து பயன் தரும் மழை மேகம் போல் உள்ளான்
திருச்சிற்றம்பலம்🙏

Leave a comment