திருமூலர் திருமந்திரம் உரை எண் 10 ன் விளக்கம்:

தானே இருநிலம் தாங்கி விண்ணாய் நிற்கும்
தானே சுடும்அங்கி ஞாயிறும் திங்களும் தானே மழைபொழி தையலு மாய்நிற்கும் தானே தடவரை  தண்கடல் ஆமே.

ஓம் என்னும் அக்ஷர சப்தத்தில் தான் ஆகாயம் குறுக்கிலும் நெடுக்கிலும் கோர்க்கப்பட்டுள்ளது.  இந்த அக்ஷரத்தின் கட்டளையாலேயே சூரியனும் சந்திரனும் தம்தம் ஸ்தானங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.- என்பதுரிஷி யாக்ஞவல்கியரின் உபதேசம்.
அவ்வகையில் எவர் ஒருவர் இந்த அக்ஷர சப்தத்தை தனதாக்கி கொண்டார்களோ அவர்களே “தானே” இன்னும் இத் திருமந்திர சொல்லுக்கு உரியவர்கள்.

தானே இருநிலம் தாங்கி விண்ணாய் நிற்கும்:
ஒவ்வொரு மானுட உடம்பும் நிலவடிவான பூமியின் அம்சமே ஆகும். (“தானே”) அட்சரமே இவ்வுடம்பையும்,  இவ்- உடம்பை தாங்கிக் கொண்டிருக்கும் பூமியையும், இவ்விரண்டும் ஒடுங்கி உள்ள விண்ணாயும் நிற்கிறது.

தானே சுடும்அங்கி ஞாயிறும் திங்களும் தானே மழைபொழி தையலு மாய்நிற்கும்
தானே தடவரை  தண்கடல் ஆமே.
( “தானே”) அட்சரமே  விண்ணுக்குள் ஒடுங்கி உள்ள சுடும் சூரிய நெருப்பு மற்றும் குளிர்ந்த சந்திரனின் இயக்கங்களாகவும், மழையாகவும், அகன்ற மலை தொடராகவும், குளிர்ந்த நீர் நிறைந்த கடலாகவும், தாயின் கருணையோடு அருள் பாலித்துக்கொண்டிருக்கிறது.
திருச்சிற்றம்பலம்🙏