திருமூலர் திருமந்திரம் உரை எண் 9 ன் விளக்கம்:


பொன்னாற் புரிந்திட்ட பொற்சடை என்னைப்
பின்னாற் பிறங்க இருந்தவன் பேர்நந்தி என்னால் தொழப்படும் எம்இறை மற்றவன்
தன்னால் தொழப்படு வார்இல்லை தானே.

பொன்னால் செய்தது போல ஒளி வீசி திகழும் தங்க நிற தாழ்ச்சடை பின்கழுத்தின் கீழாக என் மூலாதாரத்தில் வீற்றிருக்கும் இறைவன் நந்தி எம்பெருமான், அவனே நான் பணிந்து தொழும் எம் இறைவன் மற்றவர்கள் கண்களுக்கு புலப்படாதவன் ஆதலின், மற்றவன் தன்னால் அவன் தொழப்படு வார்இல்லை தானே.
திருச்சிற்றம்பலம்🙏