“சமயங்கள் வெறும் கற்பனையே”


தேவரீர் சகலத்தையும் செய்யவல்லவர். நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன். -பைபிள் பழைய ஏற்பாடு: யோபு 42:2


அவரவர் பிராப்தப் பிரகாரம் அதற்கானவன் ஆங்காங்கிருந்து ஆட்டுவிப்பவன், என்றும் நடவாதது என் முயற்சிக்கினும் நடவாது. நடப்பது என்பதை என் தடை செய்யினும் நில்லாது. இதுவே திண்ணம். ஆதலின் மௌனமாயிருக்கை நன்று!”- என்பது ரமண மகரிஷியின் அனுபவ உபதேசம்.


இதிலிருந்து தேவரீர் என்பது ஒவ்வொருவர் உள்ளிருந்து மட்டுமே நடத்திக் நடத்திக் கொண்டிருக்கிறார் என்பதும் ஊர்ஜிதம் ஆகின்றது. அதாவது தேவரீர் என்பவரை ஒவ்வொருவரும் தம் புறத்தில் வைத்து வழிபடும் போது தான் அது தனித்தனி சமயங்களாக மாறுகிறது. மாறாக தேவரீர் என்பவர் அவரவர் அகத்தில் மட்டுமே  குடி கொண்டிருக்கிறார் என்னும் உண்மை ஒவ்வொருவரால் தனித்தனியாக உணரப்படும் போது,  சமயங்கள் என்பது முற்றிலும் இல்லாமலேயே போய்விடும்.

  

Leave a comment