திருமூலர் திருமந்திரம் உரை :2 ன் விளக்கம்:

“போற்றி இசைத்து இன்னுயிர் மன்னும் புனிதனை
நால்திசைக்கும் நல்ல மாதுக்கும் நாதனை
மேல்திசைக்குள் தென்திசைக்கு ஒரு வேந்தனாம்
கூற்று உதைத் தானையான் கூறுகின்றேனே”

“நால்திசைக்கும் நல்ல மாதுக்கும் நாதனை
போற்றி இசைத்து இன்னுயிர் மன்னும் புனிதனை”
நான்கு திசைகளிலும் பரவி இருக்கும் காற்றானது, மூச்சு காற்றாக அதாவது,  ஜீவாத்மாவாக, சக்தியாக ஒரு நல்ல மாதுவாக ஒவ்வொரு மானுட  யாக்கைக்குள்ளும் வியாபித்திருக்கிறது. அந்த சக்தியால் அதே தேகத்துள் ஆதி முதலே குடி கொண்டிருக்கும் பரமாத்மாவான சிவம், அம்மாதுக்கு நாதனாய், இடைவிடாத ஜெபத்தால் போற்றி இசைத்து கொண்டாடும் பெருமைக்குரியவன்.

“மேல்திசைக்குள் தென்திசைக்கு ஒரு வேந்தனாம்
கூற்று உதைத் தானையான் கூறுகின்றேனே”
தென் என்பதற்கு கற்பு என்று ஒரு பொருள் உண்டு. அதாவது அவனே நான்கு திசைக்குள் இருக்கும் அனைத்து ஜீவாத்மாவிற்கும் ஒரே பரமாத்மாவாக இருந்த போதிலும், தன்னை மட்டுமே நோக்கும் நல்ல மாதுவான சக்திக்கு, கூற்றுவனையே காலால் உதைக்கும் வேந்தன் ஆவான். அவனே நான் குறிக்கும் பரம்பொருளாவான் என்பதாக திருமூலர் தம் திருமந்திரத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
திருச்சிற்றம்பலம்🙏


Leave a comment