
‘மனித மனம் ஒரு குரங்கு’ என்பது ஒரு பழமொழி ஆனால், மன தைரியம் பெறுவதற்கு ..
“புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனுமத் ஸ்மரணாத் பவேத்”
என்னும் இந்த ஸ்லோகம் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு உரிய பிரார்த்தனையாகவும், இதை ஜபித்து வந்தால், மனதைரியம், சாதுர்யமான புத்தி, வாக்குவன்மை, வீரம் ஆகிய எல்லா நற்குணங்களும் கிட்டும் என்று சொல்லப்படுகிறது.
ஆம், ஸ்ரீ ஹனுமானின் பலம் அவருக்கே தெரியாது என்பது போல, தன் ஆன்ம பலம் என்னவென்று தனக்கே தெரியாத ஒருவரின் நிலையில், அங்கும் இங்கும் குரங்கு போல் அலைபாயும் மனமானது அத்தகையவரை தன் கட்டுக்குள் கொண்டு வந்து பலம் இழக்க செய்து விடும்.
மாறாக மற்றொருவரால் எடுத்து சொல்லப்பட்டால் ஸ்ரீ ஹனுமானின் பலம் வெளிப்படும் என்பது போல, புத்தியானது, ஆத்ம விசாரணையின் மூலம் அத்தகையவரின் பலத்தை வெளிப்படுத்தும் போது…
அலைபாயும் அவரின் மனம் நிலை பெற்று தைரியமாகி, பின் அதுவே சாதுர்யமான புத்தியாக மாறி, அதன்பின் ஸ்ரீ ஹனுமானை போன்று இடைவிடாத ராம நாம ஜெபத்தால் வாக்கு வன்மை கொண்டதாக மாறி, பின் அதுவே..
“அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.” என்று வள்ளுவர் தம் திருக்குறளில் சுட்டிக் காண்பித்தபடி, ஸ்ரீ ஹனுமானை போன்று அன்பு சார்ந்த அறமாகவும், வீரமாகவும் ஆகும்.
Ram Ram

