
மெய்ஞானத்தை பற்றிய ஒரு அருமையான தகவல் இது👌,
அதாவது எவ்வாறு ஒரு நதியானது தான் கடந்து வந்த பொய்யான பாதைகளால் (அடையாளங்களால்) உருவான பொய்யான பயம் முழுவதையும் அமைதி நிறைந்த கடலில் கரைத்து தானும் அதில் ஒன்றாகி விடுகிறதோ,
அவ்வாறே ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு நாளும் தன் விழிப்பு நிலையில் கடந்து வந்த பொய்யான அடையாளங்களையும், அதன் காரணம் உருவான பொய்யான பயங்களையும், தன்னுடைய அமைதியான ஆழ்ந்த உறக்க நிலையில் ஒன்றுமில்லாமல் கரைத்து, அந்த அமைதி நிறைந்த, “ஒன்றுமில்லாத விழிப்புணர்வில்” எந்த அடையாளமும் இல்லாமல் தானும் ஒன்றாகி விடுகிறான், எனினும் இதில் விந்தை என்னவென்றால், அமைதிக் கடலில் கலந்த நதியானது ஒரு போதும் மீண்டும் திரும்பி வருவதில்லை, ஆனால் மனிதனோ அமைதி நிறைந்த உறக்க நிலையில் இருந்து திரும்பவும் விழிப்பு நிலைக்கு வந்து, மீண்டும் மீண்டும் தன்னை பயத்துக்கு உள்ளாக்கி கொள்கிறான்,
இதையே ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில், “உறக்கத்திலும் விழிப்பிலும் முறைமை வகிப்பவனுடைய யோகம் துன்பத்தை துடைப்பதாகிறது” என்று உபதேசித்துள்ளார். அதாவது ஒருவர் உறக்க நிலையில் அனுபவிக்கும் “ஒன்றும் இல்லாத விழிப்புணர்வை”, தன் விழிப்பு நிலையிலும் தொடர முயற்சித்தால் அது பயமற்ற தன்மையை கொடுக்கும் என்று.
இவ்வாறாக இதில் மறைந்திருக்கும் உட்பொருளை பற்றி எங்கள் குரு ஒருமுறை எங்களுக்கு விளக்கியுள்ளர்.
இந்த நிலையைத்தான் “existence without identification” என்று முண்டகோபனிஷத் வர்ணிக்கிறது.
ஸ்ரீ குருப்யோ நமஹ🙏

