
நீங்கள் எப்படி உணருகிறீர்களோ அப்படித்தான் உலகம் இருக்கிறது.
நீங்கள் பார்ப்பது அல்ல; நீங்கள் அதை எப்படி பார்க்கிறீர்கள் என்பதுதான்.
நீங்கள் கேட்பது அல்ல; நீங்கள் அதை எப்படி கேட்கிறீர்கள் என்பதுதான்.
நீங்கள் உணருவது அல்ல; அதை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதுதான். – ரூமி
உலகத்தை பார்ப்பதற்கும் அதை எப்படி பார்க்கிறீர்கள் என்பதற்கும் உள்ள வேறுபாடு என்பது?
உலகத்தை பார்ப்பது என்பது ஒருவர் தம் புறக்கண்களால் மட்டுமே பார்ப்பது,
மாறாக எப்படிப் பார்க்கிறீர்கள் என்பது, பார்க்கும் தம் கண்களுக்கு எது ஒளியாக இருந்து உலகத்தை காண்பிக்கிறது என்பதை அறிந்து பார்ப்பது.
அது போன்றே கேட்பது என்பது ஒருவர் தம் புறக்காதுகளால் மட்டுமே கேட்பது,
மாறாக எப்படி கேட்கிறீர்கள் என்பது கேட்கும் தம் காதுகளுக்கு எது கேட்கும் சக்தியாக இருந்து உலகத்தை கேட்க வைக்கிறது என்பதை அறிந்து கேட்பது.
அது போன்றே உணர்வது என்பது ஒருவர் தம் மனதாலும், உடம்பாலும் மட்டுமே உணர்வது,
மாறாக எப்படி உணர்கிறீர்கள் என்பது எது உணரும் சக்தியாக இருந்து உலகத்தை மனதாலும், உடம்பாலும் உணர வைக்கிறது என்பதை அறிந்து உணர்வது.
இவ்வாறாக ஒருவர் இவ்வுலகத்தை பார்த்து, கேட்டு, உணரும்போது, அத்தகையவர் இவ்வுலகத்தின் முழு இயக்கத்தையும் தம்முள்ளேயே கண்டும், கேட்டும், உணரலாம்.
ஸ்ரீ குருப்யோ நமஹ

