“Skill first, value then next.”

“Skill first, value then next.”

Dear soul, don’t set a high value on someone before they deserve it; You either lose them or ruin yourself- Hazrath Rumi quotes 

“முதலில் திறமை, பிறகு மதிப்பு.”அன்புள்ள ஆன்மா, ஒருவர் தகுதியுடையவராக இருப்பதற்கு முன் அவர் மீது அதிக மதிப்பை அமைக்காதீர்கள்;  நீங்கள் அவர்களை இழக்கிறீர்கள் அல்லது உங்களை அழித்துவிடுவீர்கள். என்று  ஹஜ்ரத் ரூமி மேற்கோள் காட்டுகிறார்.

ஒருவர் தகுதி உடையவர்தானா இல்லையா என்பதை அறிந்து கொள்வதற்கு அருட்பிரகாச வள்ளலார் வழிகாட்டுகிறார். “உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்”  என்று, அதாவது உள்ளொன்று வைத்து புறமொன்று  பேசுபவர்களை ‘தகுதி அற்றவர்கள்’ என்றும் , உள்ளதை உள்ளபடியே  உரைப்பவர்களையே ‘தகுதி உடையவர்கள்’  என்றும் பொருள் கொள்ளலாம். 

இத்தகைய தகுதி உடையவர்களை பகுத்தறிந்து அடையாளம் காண முதலில் ஒருவர்  அதற்கேற்ற ‘திறனை’  தன்னில்  வளர்த்துக் கொள்ள வேண்டும், அதன்பின் ‘நன்மதிப்பு’  வைத்தால் அது நிலைத்து நிற்கும்.இத்தகைய ‘திறன்’ இல்லாமல் ஒருவர் மீது ‘நன்மதிப்பு’ வைக்கும் போது ஹஜ்ரத் ரூமி  கூறியது போன்று, ஒன்று அவர்களை இழந்து விடுவோம் அல்லது  நம்மை நாமே அழித்துக் கொள்ளுவோம்.

மனதில் ‘திறன்’  உண்டாக இடைவிடாது மந்திர ஜெபம் செய்ய வேண்டும், அது ‘தன்னில் திறன்’ ஏற்படும்படி செய்யும் என்பது சான்றோர்களின் அருள் வாக்கு.

ஸ்ரீ குருப்யோ நமஹ🙏

Leave a comment