“பஞ்சகோஶ அந்தர ஸ்தி²தாயை நம꞉”

“ஒரு இயற்பியலாளர் என்பது ஒரு அணுவின் வழியாக தன்னைப் பார்ப்பது மட்டுமே.” – நீல்ஸ் போர்.

நீல்ஸ் ஹென்ரிக் டேவிட் போர் (7 அக்டோபர் 1885 – 18 நவம்பர் 1962) ஒரு டேனிஷ் கோட்பாட்டு இயற்பியலாளர் ஆவார், அவர் அணு அமைப்பு மற்றும் குவாண்டம் கோட்பாட்டைப் புரிந்துகொள்வதில் அடிப்படை பங்களிப்புகளைச் செய்தார், இதற்காக அவர் 1922 இல் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார். போர் ஒரு தத்துவஞானி மற்றும் அறிவியல் ஆராய்ச்சியின் ஊக்குவிப்பாளராகவும் இருந்தார்.

சராசரி வயது வந்த மனித உடலில் ஏழு ஆக்டில்லியன் அணுக்கள் உள்ளன (அது 7 மற்றும் 27 பூஜ்ஜியங்கள்).

இருப்பினும், ஒரு அணுவின் 99.9% வெறும் வெற்று இடம். எனவே, நீங்கள் அணுக்களில் உள்ள அனைத்து இடத்தையும் அகற்றினால், ஒவ்வொரு மனித உடலும், வடிவமும் ஒன்றுமில்லாத தன்மையாகவே தோன்றும்.

இதன் விரிவாக்கம்:
ஓம் பஞ்சகோஶாந்தரஸ்தி²தாயை நம꞉ । என்பது அம்பிகையின் ஓர் நாமம். இதை
பஞ்சகோஶ அந்தர ஸ்தி²தாயை நம꞉ என்று பதம் பிரித்தால்,

பஞ்சகோஶ – உடம்பில் உள்ள அணுக்களில் உள்ள 99.9% வெற்றிடத்தால் வடிவமைக்கப்பட்ட அன்னமய, பிராணமய, மனோமய, விஞ்ஞானமய, ஆனந்தமயம் ஆகிய பஞ்ச கோசங்கள்,

அந்தர – மத்தியில் மீதமுள்ள 0.1% அணுசக்தியாக (அழிவற்ற ஆத்மாவாக) ஒன்றுமில்லாத நிலைவடிவான பஞ்சகோஶ சம்பந்தம் கொண்ட ஒவ்வொரு மனித உருவும் வெளிப்பட காரணமாய்

ஸ்தி²தாயை – இருப்பவளுக்கு

நம꞉ – நமஸ்காரம் என்று பொருள்.

அதாவது ஒளிக்கும் பராசக்தியாக (0.1% அணுசக்தியாக) ஒவ்வொரு மனித உருவின் மத்தியில் உள்ள நாபிக்கமலத்தில் அமர்ந்து கொண்டு, மீதமுள்ள 99.9% வெற்றிடத்தைக் கொண்டு, பஞ்சகோஶ சம்பந்தம் கொண்ட ஒவ்வொரு மனித உருவையும் அதன் வழியே உலகங்களையும், ஒவ்வொரு வெளிப் பிராணனின் அசைவு மூலம் தோற்றுவித்து ஒளிரச் செய்துகொண்டும்,

அதே ஒளிக்கும் பராசக்தியான அவள் மீண்டும் தன் மூலத்திற்கு ஒவ்வொரு உள் பிராணனின் அசைவு மூலம் திரும்பும்போது, தான் ஒளிரச் செய்ததிலிருந்து எதையும் எடுத்துச் செல்லாதவளாகவும், அதாவது தோற்றமாய் வெளியில் ‘இருக்கு’ எனவும், தோன்றா நிலையில் உள்ளே ‘இல்லை’ எனவும் தன்னை மாயா சக்தியாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறாள்.

அவளை உள்ளது உள்ளபடி அறிந்து கொள்வார்க்கு ஒவ்வொரு வெளிப் பிராணனின் அசைவு மூலம் ஒளிரச் செய்தவைகளை ‘இல்லை’ எனவும், உடம்பின் மத்தியில் நாபிக்கமலத்தில் அமர்ந்து ஒளிர்ந்து கொண்டிருக்கும் அவளை ஒவ்வொரு உள் பிராணனின் அசைவு மூலம் ‘இருக்கு’ எனவும் மாற்றி உணரச்செய்து, தன்னை ப்ரஹ்ம சக்தியாகவும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறாள்.

எவ்வாறு ஆழ்ந்த நித்திரைக்கு அதிபதியான ‘நித்ராதேவி’ தன் மூலத்திற்கு திரும்பும்போது எதையும் எடுத்துச் செல்வதில்லையோ அவ்வாறே, ஒளிக்கும் பராசக்தி தம் மூலத்திற்கு திரும்பும் போது தம்மால் ஒளிரச் செய்த பஞ்ச கோஷங்கள் அடங்கிய இவ்வுடம்பையும் அதன் மூலம் ஒளிர்ந்த இவ்வுலகங்களையும் எடுத்துச் செல்வதில்லை!

அவ்வாறு இருப்பவளுக்கு ஒவ்வொரு உள் பிராணனின் அசைவு மூலம் நமஸ்காரம்.

ஓங்காரி என்பாள் அவள்ஒரு பெண்பிள்ளை
நீங்காத பச்சை நிறத்தை உடையவள்
ஆங்காரி யாகியே ஐவரைப் பெற்றிட்டு
இரீங்காரத் துள்ளே இனிதிருந் தாளே.
:திருமூலர் திருமந்திரம்

ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏🏿

Leave a comment