
“ஊன்பற்றி நின்ற உணர்வொரு மந்திரம்”
ஒருவர் தாம் உறக்கத்திலிருந்து விழித்து எழுந்த அக்கணத்தில் முதலில் தம்மை “இருக்கு” (pure consciousness) என்னும் உணர்வால் அறிந்து கொள்ள முயலவேண்டும். அவ்வாறு முதன் முதலில் “இருக்கு” என்னும் உணர்வால் தாம் அறியப்படும் போது, அவ்-ஊன்பற்றி நின்ற உணர்வொரு மந்திரம் தொடர்ந்து வரும் அடுத்தடுத்த கணங்களில் தம்மைத் தாமே பற்றிக் கொண்டு தலைப்பட்டு நிற்கும். அதன் காரணம் ‘அகங்காரம் மற்றும் நாம ரூபம் கொண்ட உலகங்களாலும், அதன் காரணம் உருவாகும் ராக துவேஷங்களாலும் எந்தவொரு பாதிப்பும் ஏற்ப்படாது.
அவ்வாறு விழித்தவுடன் “இருக்கு” என்னும் உணர்வால் முதலில் தாம் அறியப்பட வேண்டுமெனில்?
உறக்கம் வரும்போதும் “இருக்கு” என்னும் அவ்வுணர்வுடன் மட்டுமே (as with pure consciousness) உறங்கினால், உறக்கத்திலும் மற்றும் விழிப்பிலும் அவ்வுணர்வு, அவ்வுருவாகவே இயல்பாகவே தொடர்ந்து வெளிப்பாட்டுக் கொண்டிருக்கும்.
“உறக்கத்திலும் விழிப்பிலும் முறைமை வகிப்பவனுடைய யோகம் துன்பத்தை துடைப்பதாகிறது” என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் பகவத் கீதையில் இதை குறிப்பிட்டுள்ளார்.
Sri gurubhyo namaha🙏🏿

