
அபூர்வ 1000 வருட பழமையான வலம்புரி சங்கு ஒன்று கல்லணை பூம்புகார் சாலையில் வேப்பத்தூர் அருகில் உள்ள கல்யாணபுரம் என்னும் ஊரில் “இடம் கொண்டேஸ்வரர் கோவிலில்” உள்ளது. இந்த வலம்புரி சங்கின் மகிமை மூன்று சங்குகள் ஒன்றுக்குள் ஒன்றாக உள்ளடங்கி “ஓம்” என்னும் பிரணவ சப்தமாக ஒலிப்பது .

பிரச்னோ உபநிஷத்:5.6 ல் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது. “ஓம்காரத்தின் மூன்று மாத்திரைகளான அ, ஹூ, இ தனித்தனியே உபாசிக்கப்பட்டால், அவை அழியும் பலனைத் தருபவை. மூன்றும் சேர்த்து உபாசிக்கப்பட்டால், அவை அங்ஙனமாகா” என்று.
அவ்வாறே இந்த அபூர்வ சங்கு பிரணவத்தின் “இ, அ, ஹூ “ எனும் மூன்று மாத்திரைகளையும், வெளி, உள், இடை என்று தன்னுள் முறையாக ஒன்றினுள் ஒன்றாக ஒடுக்கி, இம் மூன்று மாத்திரை அளவான சப்தங்களையும், புனித நீருடன் ஒன்று சேர்த்து, ஓம்கார சப்த நீராக, இடம் கொண்டேஸ்வரர் மேல் படுவதை காணலாம்.
தண்ணீரில் ஒலி அதிர்வுகளின் வேகம் அதிகம், காற்றின் வினாடிக்கு 340 மீட்டருடன் ஒப்பிடும்போது, காற்றில் உள்ளதை விட தண்ணீரில் ஒலி வினாடிக்கு 1500 மீட்டர் வேகத்தில் பயணிக்கிறது. வெப்பநிலையானது நீரில் ஒலியின் வேகத்தையும் பாதிக்கிறது, வெப்பமான நீரில் ஒலி வேகமாக பயணிக்கிறது.
அவ்வகையில் ஹோமத்தில் வைக்கப்பட்ட புனித நீரின் வெப்பத்துடன், இந்த அபூர்வ வலம்புரி சங்கிலிருந்து வெளிப்படும் ஓம்கார ஒலியின் அதிர்வெண்கள் கலந்து, சிவனுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட நீரானது நம் மீது படும்போது அது எண்ணற்ற நேர்மறையான அதிர்வுகளை நம் உடலில் ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை!
இத்தகைய அபூர்வ தரிசனம் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் சோமவாரத்தில் மட்டுமே நடைபெறும் நிகழ்வாகும்.

ஓம் நமசிவாய 🙏🏿

