
”புதியது பாடலென்றும் புதியது, பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது, முருகா உனைப் பாடும் பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது, முருகா உனைப் பாடும் பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது.”
எந்த மனிதனும் ஒடும் ஒரே ஆற்றின் தண்ணீரில் இரண்டு முறை கால் வைப்பதில்லை, ஏனெனில் அது ஒரே நதியல்ல, அவர் ஒரே மனிதனும் அல்ல. :ஹெராக்ளிட்டஸ், பண்டைய கிரேக்க தத்துவஞானி
அதே போல எந்த மனிதனும் எங்கும் சஞ்சரிக்கும் காற்றில் இரண்டு முறை சுவாசித்த காற்றையே மீண்டும் சுவாசிப்பதில்லை, ஏனெனில் அது ஒரே காற்று அல்ல, அவர் ஒரே மனிதனும் அல்ல.
அவ்வகையில் ஒவ்வொரு மனிதனும் ‘நான்’ என்று தன் இருப்பை சுட்டிக் காண்பிப்பது, ஒரே ‘நான்’ அல்ல, அதாவது “ஒவ்வொரு மூச்சிலும் நான் (முருகன்) புதியவன்” என்ற சொற்றொடர் இதைப் பிரதிபலிக்கிறது. அவ்வாறு ஒவ்வொரு முறையும் ‘நான்’ புதிய ‘நான்’ ஆக ‘முருகனாகவே’ இருக்கிறேன் என்பதை உணர்ந்து கொண்டேயிருந்தால், ‘பற்றுதல்’ என்னும் மாயை எவ்வாறு ஒரு மனிதனைப் பற்ற முடியும்?
ஸ்ரீ குருப்யோ நமஹ🙏🏿

