
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தனது மகளுக்கு எழுதிய கடிதத்தின் ஒரு பகுதி:
இதுவரை, விஞ்ஞானம் முறையான விளக்கத்தைக் கண்டுபிடிக்காத மிகவும் சக்திவாய்ந்த சக்தி உள்ளது. இது மற்ற அனைத்தையும் உள்ளடக்கிய மற்றும் நிர்வகிக்கும் ஒரு சக்தியாகும், மேலும் பிரபஞ்சத்தில் செயல்படும் எந்தவொரு நிகழ்வின் பின்னணியிலும் உள்ளது மற்றும் இன்னும் நம்மால் அடையாளம் காணப்படவில்லை.
இந்த பிரபஞ்ச சக்தியே அன்பு. விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தின் ஒரு ஒருங்கிணைந்த கோட்பாட்டைத் தேடும் போது அவர்கள் மிகவும் சக்திவாய்ந்த கண்ணுக்கு தெரியாத இச்சக்தியை மறந்துவிட்டனர்.
ஆனால் மெய்ஞானத்தில் முன்னரே இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது:
- “உங்களுக்குள் ஒரு சக்தி இருக்கிறது, அது உங்களுக்கு உயிர் கொடுக்கிறது அதைத்தேடுங்கள்“ என்று சூபிஞானி ஹஸ்ரத் ரூமியும்,
- “உயர் சக்திதான் எல்லாவற்றையும் செய்கிறது, மனிதன் ஒரு கருவி மட்டுமே. அந்த நிலையை ஏற்றுக்கொண்டால், அவன் பிரச்சனைகளிலிருந்து விடுபடுகிறான்; இல்லையெனில், அவர் அவைகளை நியாயப்படுத்துகிறார்.” என்று ரமண மகரிஷியும், தங்களை உணர்ந்து வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும் தனது கடிதத்தில்…
இந்த சக்தியையே அன்பு என்றும் அதுவே ஒளி, அது கொடுப்பவர்களையும் பெறுபவர்களையும் அறிவூட்டுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
காயத்ரி மந்திரத்தின் பொருளும் இதுவே ஆகிறது, “யார் என் அறிவாகிய ஒளியை தூண்டுகிறாரோ, அந்த (உள்ளிருக்கும்) சுடர் கடவுளின் மேலான ஒளியை தியானிப்போமாக என்று!
ஸ்ரீ குருப்யோ நமஹ🙏🏿

