“நாம்”

நீங்கள் பிரபஞ்சத்தைப் போலவே பழமையானவர், ஏனென்றால் பொருள் (ஆன்மாவை) உருவாக்கவோ அழிக்கவோ முடியாது. ஆழ்ந்த மட்டத்தில், கர்ம விதிகளுக்கேற்ப, நீங்கள் ஒரு சிறிது நேரம் மற்ற ஜீவராசிகளாகவும், மனிதனாகவும், தன்னை அனுபவிக்கும் பிரபஞ்சம்.

காலம், வெளி, உருவங்கள் இவைகளுக்கு அப்பாற்பட்டு, ‘நாம்’ எனும் ஒரே அளப்பரிய பேரின்ப சக்தியாக விளங்கிக் கொண்டிருக்கும் பிரபஞ்சம், அறியாமையால் சிறிது நேரம் மனிதனாக தன்னைத் தானே சுருக்கிக்கொண்டு, ‘நான்’ எனும் சொற்ப சக்திக்குள் தன்னை அடக்கிக் கொண்டு, தன்னைத் தானே துன்புறுத்திக் கொண்டிருக்கிறது.

குருவருள் கூடி நின்றால் ‘நான்’ எனும் இவ்- அறியாமையை கடந்து, சுட்டும் தன்மை இல்லாத ‘நாம்’ எனும் ஒரே அளப்பரிய பேரின்ப சக்தியாக பிரகாசிக்கலாம்!

சந்த் கபீர்தாஸ் கூறுவது போல:“வரம்புகளுக்குள் தனக்கு தானே அடைபட்டுக் கிடப்பவன் மனிதன், வரம்பற்ற நிலையில் சஞ்சரிப்பவன் ஒரு சாது. வரையறுக்கப்பட்ட மற்றும் வரம்பற்ற, புரிந்துகொள்ள முடியாத இரண்டையும் கைவிட்டவரின் இருப்பு, பிரபஞ்சத்தைப் போலவே நித்தியமானது, அழிவற்றது.

அதே போல ரமண மகரிஷியும் இவ்வாறே கூறுகிறார்: “மனம் என்பது வரம்புகளை வைத்துள்ள உணர்வு. நீங்கள் உண்மையில் வரம்பற்றவர். பின்னர் நீங்கள் வரம்புகளை ஏற்றுக்கொண்டு மனதாகவும், உடலாகவும் மாறுகிறீர்கள். மனம், உடம்பு இரண்டையும் கைவிட்டவரின் இருப்பு, பிரபஞ்சத்தைப் போலவே நித்தியமானது, அழிவற்றது.
ஸ்ரீ குருப்யோ நமஹ🙏🏿

Leave a comment