
“உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!” என்பது புறநானூற்றுப் பாடல். ‘உண்டி’ என்பதற்கு உணவு என்று பொருள் உள்ளது. ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என்னும் இப் புறநானூற்றுப் பாடலின் படி, ஒருவரின் உயிருடன் கலக்கும்படி உணவை கொடுப்பது என்பது யாவர்க்கும் அவ்வளவு எளிதென்று! ஏனெனில் உண்பவர் தம் மனதில் பரமதிருப்தி ஏற்பட்டாலேயன்றி, உண்ணப்பட்ட அவ்வுணவு அவர்கள் உயிரினில் கலக்கவே கலக்காது.
அதாவது “உணவும் நானே, உண்பவனும் நானே, உணவுக்கும் உண்பவனுக்கும் இடையில் உள்ள உறவும் (உணவைக் கொடுப்பவனும்) நானே” என்று தைத்ரியோ உபநிஷத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் ‘அன்னம் பிரம்மம்’ என்றும், இவ்வாறு பிரம்மம் என்னும் உயிர்சக்தியாக இருக்கும் அன்னத்தை அறிந்து எவன் கொடுக்கிறானோ, அவன் இதனால் ஆத்ம ரஷ்ணம் செய்தவனாகிறான் என்றும் இவ் உபநிஷத் சொல்கிறது. ஆத்ம ரஷ்ணம் என்றால் உயிரை பாதுகாத்தல் என்று பொருள்.
அதாவது ‘உண்டி’ எனும் உணவை கொடுப்பவர், உணவும் உயிரே, அதை கொடுக்கும் தாமும் உயிரே என்று அறிந்து கொடுத்தால், அவ்வுணவை உண்பவரின் உயிர் பாதுகாக்கப்படும் என்பதாக “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!” இப்புறநானூற்றுப் பாடலுக்கு பொருளாக கொள்ளலாம்.
ஸ்ரீ குருப்யோ நமஹ🙏🏿

