“தனித்திருத்தலே உன் இயல்பு நிலை“

தனியாகத்தான் வர வேண்டி உள்ளது: ஆம் உருவமற்ற இருப்பே உன்னுடைய உண்மையான இயல்பாகும். ஓர் அணுவாய் தனியாகத்தான் உன் தாயின் (கர்பப்பைக்குள்) உருவத்துக்குள் புகுந்து, நீயே ஓர் உருவினை படைத்து,  அதனுள் தனியாக நிற்கிறாய்!

தனியாகத் தான் செல்ல வேண்டியுள்ளது:  ஆம் மரணம் என்னும் நிகழ்வில், அதுவரை நின்ற அவ்வுருவினை விட்டு நீங்கி, மீண்டும் ஓர் அணுவாய் வேறொரு கர்பப்பையை நாடி, தனியாகத் தான் செல்ல வேண்டியுள்ளது!!

 இடைப்பட்ட சிறிய காலத்தில் கூட்டத்தினால் உன்னை நீ அதிகம் நினைத்துக் கொள்ளாதே!!!? ஆம் இவ்வாறு தோன்றி தோன்றி மறையும் பற்பல உருவங்களின் மாயா பந்தத்தினால் கூடும் கூட்டத்தினால், உன்னை நீ அதிகம் அக்கூட்டத்தினுள் ஒன்றாக நினைத்துக் கொள்ளாதே. மாறாக இயல்பான உருவமற்ற ஓர் அணுவாக எப்போதும் அணுவில் அணுவான குருவுடன் தனித்தே இரு!!!

இது நடைமுறையில் சாத்தியமா இன்னும் ஒரு கேள்வி எழுந்தால்? ஒவ்வொரு முறையும் ஆழ்ந்த உறக்க நிலை என்று வரும்போது அறியாமலேயே உருவங்களின் கூட்டத்திலிருந்து விலகி, உன்னுடைய இயல்பான உருவமற்ற தன்மையை அடைகிறாய். விழித்தவுடன் உன் தனித்த இயல்பு நிலையை மறந்து, மீண்டும் இக்கூட்டத்தினுள் ஒன்றாக உன்னையே நீ இணைத்துக் கொண்டு, அதுவாகவே உன்னை நினைத்துக் கொள்கிறாய். எனவே ‘தனித்திருத்தல் என்னும் இயல்பு நிலை’ உறக்க நிலை போன்று விழிப்பு நிலையிலும் குருவருள் கூடின் அனைவருக்கும் சாத்தியமே!!!!

ஸ்ரீ குருப்யோ நமஹ🙏🏿