“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி”

 “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி, பாலும் தேனும் உடலுக்குறுதி, வேலும் மயிலும் உயிருக்குறுதி”என்பது இத் தமிழ் பழமொழியின் முழுமை வாக்கியம்.

“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி” இதைப்பற்றி முதலில் காண்போம்.

கண்களால் காண்பதும் பொய், காதுகளால் கேட்பதும் பொய்,  தீர விசாரிப்பதே மெய் என்னும் மற்றொரு தமிழ் பழமொழிகேற்ப, இரண்டு கண்களாலும் கண்டதையும், மற்றும்  இரண்டு காதுகளாலும் கேட்டதையும் மட்டுமே, சொன்னால் அச்சொல்லின் உண்மைத் தன்மையில் உறுதி இருக்காது.

மாறாக “நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி” என்னும் பழமொழிக்கேற்ப இரண்டு கண்கள் மற்றும் இரண்டு காதுகள் ஆக மொத்தம் நாலின் வழியாக கண்டதையும், கேட்டதையும்… அறிவைக் கொண்டு முதலில் தீர விசாரித்து, இரண்டாவதாக அது நாவினால் சொல்லாக வெளிப்படும் போது, அதாவது  இரண்டு கண்கள் மற்றும் இரண்டு காதுகள் ஆகிய நாலின் வழியாக கண்டது மற்றும் கேட்டதை, ஆராயும் அறிவு மற்றும் நாக்கு என்னும் இவ்விரண்டின் வழியாக சொல்லாக வெளிப்படும் போது…

நாலுடன் இரண்டும் கலந்த அச்சொல்லில் விளங்கும் உண்மையின் உறுதித் தன்மையானது, ஆலும் வேலும் கலந்து  துலக்கிய  பல்லின் உறுதி போன்று,  காலத்திற்கும் அச்சொல்  உறுதியாக நிற்கும் என்பதாக பொருள்  கொள்ளலாம்.

Leave a comment