திருமூலர் திருமந்திரம் உரை எண்729 ன் விளக்கம்:

ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏
திருமூலர் திருமந்திரம் உரை எண்
729 ன் விளக்கம்:
நூறும் அறுபதும் ஆறும் வலம்வர
நூறும் அறுபதும் ஆறும் இடம்வர
நூறும் அறுபதும் ஆறும் எதிரிட
நூறும் அறுபதும் ஆறும் புகுவரே.

நூறும் அறுபதும் என்பது மாத்திரைகளை குறிக்கும் சொல். மாத்திரை எனப்படுவது ஒருவன் இயல்பாக கண் இமைக்கும் அல்லது சிமிட்டும்) நேரம், அல்லது இயல்பாக கை சொடுக்கும் (சிட்டிகை போடுதல்) நேரத்தை குறிக்கும் அளவாகும். எழுத்துக்கள் ஒலிக்கப்படும் கால நீட்டத்தைக் குறிக்க மாத்திரை என்னும் இக் கால அளவு பயன்படுத்தப்படுகிறது..

பிரச்னோ உபநிஷத்:5.6ல் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது, ஓம்காரத்தின் மூன்று மாத்திரைகளான  அ, உ, ம் தனித்தனியேஉபாசிக்கப்பட்டால், அவை அழியும் பலனைத்தருபவை. மூன்றும் சேர்த்து உபாசிக்கப்பட்டால், அவை அங்ஙனமாகா. வெளி வியாபாரங்களிலும் உள் வியாபாரங்களிலும் இடை வியாபாரங்களிலும் அவை முறைப்படி பொருத்தப்பட்டால் ஞானியானவன் அசைவுறான் என்று சொல்லப்பட்டுள்ளது.

இதில் ஓம்காரத்தின் ‘அகாரம் மற்றும் மகாரம்’ இவ்விரண்டு சப்தத்தையும் குரு உபதேசத்தின் மூலம் முறையாக ஒருங்கிணைத்து, அதை சொல்லாக்கி, அறுபது மாத்திரைகள் அளவு வெளி வியாபாரங்களிலும்… ‘உகாரம்‘ என்னும் சப்தத்தை சொல்லாக்கி, நூறு மாத்திரைகள் அளவு உள் வியாபாரங்களிலும், இறுதியாக ஆறு மாத்திரைகள் அளவு இடை வியாபாரங்களிலும், வலது மற்றும் இடது நாசி வழியாக முறைப்படி பொருத்தப்பட்டு வலமாகவும், இடமாகவும் வந்தால்?

அதே அளவு  நூறும் அறுபதும் ஆறும் மாத்திரைகள் அளவு கொண்ட ‘அகார,உகார,மகார’ சொற்களின் சப்தங்கள் குருவருளாக, குருவிடமிருந்தே நாபிக்கமலத்தில் இருந்து எதிர்ப்பட்டு…

நூறும் அறுபதும் ஆறும் தன்மை கொண்ட மாத்திரை ஒலிகள்- மாத்திரை இல்லாத தன்மை கொண்ட ஓம்கார ஒலியாக மூலாதாரத்தில் ரீங்காரமிட அதில் உட்புகுந்து ஒளிமயமாக ஆவாரே!
திருச்சிற்றம்பலம்🙏🏿

:

Leave a comment