சுட்டும் தன்மை அற்ற நிலையே ஆன்மாவின் நிலை

மனம் தன்னைத்தானே கொல்ல நினைக்குமோ?
மனம் தன்னைத்தானே கொல்ல முடியாது. எனவே மனதின் உண்மையான தன்மையைக் கண்டறிவதே உங்கள் தொழில். அப்போது மனம் இல்லை என்பது தெரியும். ஆன்மாவை தேடும் போது மனம் எங்கும் இல்லை. ஆன்மாவில் நிலைத்திருக்கும் போது, மனதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.

  • ஸ்ரீ ரமண மகரிஷி –

ஒவ்வொருவரின் ஆழ்ந்த உறக்கநிலை என்பதும் கூட ஒரு வகையில் ஆன்மாவில் நிலைத்திருப்பது போனதுதான். ஏனெனில் அங்கு மனம் செயலற்று இருப்பதால். அதாவது சுட்டும் தன்மை என்பது அறவே அற்ற நிலையாக ஒவ்வொருவரின் ஆழ்ந்த உறக்கநிலை விளங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் சக்தியின் விரிவாகம் மட்டும் நிகழ்ந்து கொண்டிருக்கும். அதுவே ஆன்மாவின் நிலை.

அதுபோன்றே எவரொருவர் தம் விழிப்பு நிலையிலும் தம் உருவை சுட்டும் தன்மை இல்லாத சக்தியின் விரிவாக்கமாக மட்டுமே உணரும்போது, மனம் இல்லாமல் போய்விடும்.

ஸ்ரீ குருப்யோ நமஹ🙏🏿