You are that! – The music of OM

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது

ஊதியம் இல்லை உயிர்க்கு. குறள்:231

‘இசை பட வாழ்தல்’ என்றால் ஒவ்வொரு இசையிலும் ‘ஓசை’ என்பதும் கலந்தே இருக்கும். ஓசை இல்லாத இசை என்பது உருவாகவே உருவாகாது. பொதுவாக எந்த ஓசையும் மங்கும் தன்மை கொண்டது. ஓங்கார ஓசை ஒன்றே என்றென்றும் மங்காத ஓசையாகும். எனவே மங்காத ஓங்கார ஓசையை இசையாக்கி வாழ்தலே, வள்ளுவர் பெருமான் கூறும்  ‘இசை பட வாழ்தல் ‘ என்பதற்கு மெய்ப்பொருளாக கொள்ளலாம். 

அவ்வாறு இசைபட வாழும்போது ‘ஈதல்’ என்னும் வெளிப்பாடு  இசையிலிருந்து, அதாவது ஓங்கார இசையில் இருந்து தன்னிச்சையாக வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும்.

இவ்வாறு மங்காத ஓங்கார ஓசையை இசையாக்கி வாழ்தலும்,அதன் காரணம் தன்னிச்சியாக வெளிப்படும் இடைவிடாத ஈதலுமே, ஒருவரின் உயிர்க்கு கிடைக்கும் உண்மையான ஊதியமாகும் என்பதாக,  வள்ளுவர் பெருமானின் இக்குறளுக்கு மெய்ப்பொருளாக கொள்ளலாம்.

வாழ்க தமிழ்🙏🏿 வாழ்க வள்ளுவம்🙏🏿

Leave a comment