
“எழுதாத புத்தகத்து ஏட்டின் பொருளை” என்று திருமூலர் தன் திருமந்திரத்தில் உரைத்தபடி…
ஒருவர் புத்தகத்தில் உள்ள எழுதப்பட்ட எழுத்துக்களை தம் கண்களால் பார்த்து படித்து, அவ்-ஏட்டின் பொருளை அறிந்து கொள்ளலாம். ஆனால் எழுத்துக்களே இல்லாத புத்தகத்தின் ஏட்டின் பொருளை சொல்லக்கேட்டு அறியலாம்!
கல்விக்கு அதிபதியாம் கலைவாணி சரஸ்வதி தேவி எந்த ஒரு மொழியையும் பயன்படுத்தாத எழுதாத புத்தகமாக, ‘வான் பற்றி நின்ற மறையாக’ அழிவற்ற ஒலி அலைகள் மூலம், வாழ்ந்து கொண்டிருக்கும் அனைத்து மனித குலத்திற்கும் பிரணவப் பொருளின் ரகசியத்தை சப்தபிரம்மமாக விளங்கி வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறாள். இவ்வொலி அலைகளை ஒருவர் தம் காதுகளின் வழியே கேட்டு சொல்லை மந்திரம் ஆக்கி அதன் உண்மை பொருளை உணர…
எழுதப்பட்ட எல்லா புத்தகங்களையும் அவள் திருவடியில் சமர்ப்பித்து விட்டு தம் புத்தகப்படிப்பு அறிவை ஒன்றுமில்லாத வெற்று பானை போல் ஆக்கிக் கொண்டால்…
எழுதாத புத்தகத்தின் ஏட்டின் சொரூபியாக ஒளிர்ந்து கொண்டிருக்கும் கலைவாணி கேட்பவரின் மெய்யை பொருளாக அறியும் திறனாக விளங்கி அருளுவாள்.
ஸ்ரீ குருப்யோ நமஹ🙏🏿

