
இன்று ஆசிரியர் தினம், வள்ளுவர் பெருமான் எவ்வாறு ஆசிரியரை சிறப்பித்து சொல்லியுள்ளார் என்பதை பற்றி இங்கு காணலாம்.
“கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.”குறள்:2
‘கற்றதனால்’ என்று வரும்போது, அது கல்வி கற்ற மாணவனையே குறிக்கிறது,
வாலறிவன்: ‘வால்’ என்பது சில வகை விலங்குகளுக்கு இயற்கையாகவே அமைந்திருக்கும். அதில் ஒரு பகுதி உடலின் உட்புறத்திலும், மற்றொரு பகுதி உடலின் வெளிப்புறத்திலும் இருக்கும். உட்புறத்தில் உள்ளது கண்களுக்கு புலப்படாது, வெளிப்புறத்தில் உள்ள ‘வால்’ கண்களுக்கு புலப்படும்.
அதுபோன்று ‘வ்யக்தம்’ என்னும் வெளிப்படுத்தப்பட்டதை பற்றிய கல்வி (manifest education), ‘அவ்யக்தம்’ என்னும் வெளிப்படுத்தப்படாததை பற்றிய கல்வி (unmanifest education) என்னும் இவ்விரண்டையும் ஒன்றாக அறிந்து அதை தம் மாணாக்கனுக்கும் கற்பித்த ஆசிரியரையே ‘வாலறிவன்’ என்பதாக குறிக்கிறது,
‘நற்றாள் தொழாஅர் எனின்’ என்பது அத்தகைய கல்வியை கற்பித்தவனின் திருவடிகளை தொழவில்லை என்றால் அம்-மாணாக்கன் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன? என்று வள்ளுவர் பெருமான் ஆசிரியர்களையும் அவர்தம் பணிகளையும் வெகுவாக சிறப்பித்து இக்குறளில் சொல்லியுள்ளார்.
ஆசிரியர் தினமான இன்று நன்றி சொல்லி எம் ஆசிரியரை வணங்குகிறேன்🙏🏿

