“Be still and know that I am the Power of the soul.”

The self exists only in the movement of the mind to gain something or to avoid something.
If there is no movement of gaining or avoiding, the mind is completely quiet.

-J Krishnamurti

எதையாவது பெற அல்லது எதையாவது தவிர்க்க நினக்கும் மனதின் இயக்கத்தில் தான் ‘ஆத்மா’ இருக்கிறது. பெறுவது அல்லது தவிர்ப்பது என்ற இயக்கம் இல்லை என்றால், மனம் முற்றிலும் அமைதியாக இருக்கும்”.

திரு ஜே.கிருஷ்ணமூர்த்தி.

Interpretation:

“போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே” என்று மாணிக்கவாசகப் பெருமான் சிவபுராணத்தில் பாடியுள்ள படி,

காண்பதற்கரிய பேரொளியாக, அளப்பரிய ஆற்றலாக விளங்கும் ஆன்மாவிற்கு அந்நியமாக மனமும், மனம் சார்ந்த உடம்பும், அதன் செயல்களும் இல்லை. எல்லாம் “ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி” என்று வள்ளல்பெருமான் உணர்ந்தது போன்று அனைத்தும் ஆன்மாவின் ஆற்றலே!

அத்தகைய அளப்பரிய ஆற்றலை,  எதையாவது பெற அல்லது அல்லது எதையாவது தவிர்க்க நினைக்கும் மனம், இவ்வுடம்பை கருவியாக்கி அதன் மூலம்  அங்கும் இங்குமாக, அதாவது போக்கும் வரவுமாக அலைக்கழிக்கும் இயக்கத்தின் ஒரு சிறு துளி ஆற்றலின் சக்தியாக ‘ஆன்மா’ இருப்பதாக நினைப்பது அறியாமையின் வெளிப்பாடு.

ஆன்மாவாகவே விளங்கும் குருவின் அருளால் அறியாமை என்னும் இத்தகைய மறைப்பு விலகும்போது, வெளிப்படும் பேரொளியின் ஆற்றலில், ஏதாவது ஒன்றை பெற வேண்டும் அல்லது ஏதாவது ஒன்றை  தவிர்க்க வேண்டும் என்ற எண்ணங்கள் மனதினில் இருந்து முற்றிலும் மறைந்து போகும். பெறுவது அல்லது தவிர்ப்பது என்ற இயக்கம் இல்லை என்றால், மனம் முற்றிலும் செயலற்றுப்போய் அமைதியாகி விடும். அந்நிலையே போக்கும், வரவும், புணர்வும், இல்லா ‘புண்ணியனின், சிவத்தின் நிலை’. சிவம் வெளிப்பட்டால், அது உடம்பை விட்டு உயிர் வெளியேறா வண்ணம், அதாவது  சவமாக போகாமல் சிவமாக ஆகும் வண்ணம் காக்கும் காவலனின் நிலை.

ஸ்ரீமத் பகவத் கீதை அத்தியாயம் 12 ஸ்லோகம் எட்டில், “ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா இவ்வாறு கூறியுள்ளார் என்னிடத்தே மனதை வைத்து என்னிடத்தில் புத்தியை செலுத்துக பின்பு என்னிடத்தை வசிப்பாய் என்பதில் சந்தேகம் இல்லை”

“ஒன்றை நினைத்து ஒன்றை மறந்து ஓடும் மனம் எல்லாம் நீ என்று அறிந்தால் எங்கே இயங்கும் பராபரமே”. என்பது தாயுமானசுவாமிகளின் பாடல்.

Ramana Maharishi says, “The space is within you.” The body takes up space, but you do not.

ஸ்ரீ குருப்யோ நமஹ🙏🏿

Leave a comment