
“பூமியில் எந்த மனிதனும் சுதந்திரமாக இல்லை, அனைவரும் பணம் அல்லது தேவையின் அடிமைகள். – ஞானத்தின் வழி
ஒருவர் ‘நான்’ என்று இவ் உடம்பை கருதும் வரை தேவைகள் இருந்து கொண்டு தான் இருக்கும். பணமும், தேவைகளும் ஒன்றையொன்று சார்ந்தவைகள். ஆகவே தேவைகள் இருக்கும்வரை எவர் ஒருவரும் தம்மை அடிமைத்தலையில் இருந்து விடுவித்து கொள்ளுதல் என்பது இயலாத ஒன்றாகும்.
‘நான்’ என்பது ‘வெட்டவெளி’ என்னும் சித்ஆகாசமே என்னும் ஞானஅனுபவம் குருவருளால் ஒருவருக்கு சித்தித்தால், “வெட்ட வெளிதன்னை மெய்யென் றிருப்போர்க்கு
பட்டய மேதுக்கடி குதம்பாய் பட்டய மேதுக்கடி”. என்னும் குதம்பை சித்தர் பாடல் படி,
இத்தகையோருக்கு தேவைகளோ அல்லது அத்தேவைகளுக்கு பட்டயம் போட்டு தனதாக்கிக் கொள்ளும் எண்ணங்களோ எழவே எழாது. இந்நிலையில் தான் ஒருவருடைய அடிமைசங்கலி இயல்பாகவே அறுபட்டுப்போகும். அவர்களே சுதந்திர புருஷர்கள் ஆவார்கள்.
ஸ்ரீ குருப்யோ நமஹ🙏🏿

