
‘நான்’ என் பெயர் என்பது ஓம், தெய்வீக உச்ச சக்தியின் சுருக்கம். -கிருஷ்ண யஜுர் வேதம்
மனிதர்கள் அவ்வப்போது தங்களின் தேவைக்கு ஏற்ப தாங்களே ஓர் இறைவனை படைத்து, அதற்கு ஓர் வடிவத்தையும் தாங்களே அமைத்து, அதற்கு ஓர் பெயரையும் தாங்களே கொடுத்து, அது மகிமையடைய தாங்களே ஓர் புராணக் கதையை உருவாக்கி, அதை வழிபட தாங்களே ஓர் பூஜை முறைகளையும் ஏற்படுத்திக்கொண்டு, அதன் மூலம் தங்களுடைய தேவைகள் பூர்த்தி செய்யபடும் என்றோ அல்லது அதனாலேயே தங்களுடைய தேவைகள் பூர்த்தி அடைந்ததாகவோ எண்ணிக்கொண்டு, ஆதாரமான ‘நான்’ என்னும் பெயரான ‘ஓம்’ என்னும் தெய்வீக உச்ச சக்தியின் மூலமாக தாம் இருப்பதை உணராமல், மனிதப் பிறப்பின் உண்மையான பயனை அடையாமலேயே, அடுத்தடுத்த கீழான பிறப்புக்களை நாடிநாடி, அதில் கடலில் அகப்பட்ட கட்டைபோல் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். என் செய்ய!
“உடலில் துவக்கிய வேடம் உயிர்க்கு ஆகா
உடல் கழன்றால் வேடம் உடனே கழலும்
உடல் உயிர் உண்மை என்று ஓர்ந்து கொள்ளாதார்
கடலில் அகப்பட்ட கட்டை ஒத்தாரே”
:திருமூலர் திருமந்திரம்
திருச்சிற்றம்பலம்🙏🏿

