
நமஸ்காரம்🙏🏿, ராம நாம மகிமை பற்றிய தங்களுடைய YouTube video சொற்பொழிவில் ‘ராம’ நாம சப்தத்தின் ஆதிமூலம் ரிஷிகளாலும் கண்டறியப்படவில்லை என்ற தொடக்கத்துடன் ஆரம்பித்துள்ளீர்கள். இது சத்தியத்திலும் சத்தியம் வார்த்தை.
சக்திமயமான பிரபஞ்சங்கள் உருவாக காரணமான பெருவெடிப்பு எனும் அதீத சக்தியிலேயே ‘ராம’ என்னும் சப்தம் ஒடுங்கியுள்ளது. ஆக ‘ராம’ என்னும் சப்தம் சக்தி, அதீதசக்தி இவ்விரண்டின் கலவையே எனலாம். ஆற்றல் பாதுகாப்பு விதியின்படி “ஆற்றலை உருவாக்கவோ அழிக்கவோ முடியாது; மாறாக, அது ஒரு வடிவத்திலிருந்து மற்றொரு வடிவத்திற்கு மாறுகிறது.”
‘ராம’ என்னும் சப்தம் ஆற்றல் வடிவாகவே உள்ளதால் அது ஒருவராலும் உண்டாக்கி இருக்க இயலாது, அது போன்றே பெருவெடிப்பும், பிரபஞ்சங்கள் தோற்றமும் மாறிமாறி நிகழ்ந்து கொண்டிருப்பதால், அது போன்றே அதீதசக்தி சக்தியாகவும், சக்தி அதீதசக்தியாகவும் மாறிக்கொண்டும், எப்போதும் இருந்துகொண்டும் இருக்கும் என்பதால், பலா, அதிபலா இவற்றின் கலவையான ‘ராம’ என்னும் சப்தமும் நித்தியமானது, அழிவற்றது.
வால்மீகி ராமாயணத்தில் ரிஷி விசுவாமித்திர மகரிஷியால் சரயு நதிக்கரையில் ஸ்ரீ ராமனுக்கு “பலா, அதிபலா” (சக்தி, அதீதசக்தி என்னும் தன்மை கொண்ட வார்த்தை) மந்திரமாக உபதேசிக்கப் பட்டதாக சொல்லப்பட்டுள்ளது. இதன் மூலம் ராம நாமத்துக்கும், ராம ரூபத்துக்கும், தோற்றமும் இல்லை, அழிவும் இல்லை என்பது ஊர்ஜிதமாகிறது. Because Rama is the God of the Big Bang!
நன்றி, தொடரட்டும் இது போன்ற நற்பணிகள்🙏🏿
ஜெய் ஸ்ரீராம்🙏🏿

