“Gateway to the Empire of Freedom”

சுதந்திர சாம்ராஜ்யத்தின் நுழைவாயிலில் நான்கு வாயிற்-காவலர்கள் உள்ளனர். அவை சாந்தி (சுய கட்டுப்பாடு அல்லது மன அமைதி), விசாரா (ஆன்மாவை பற்றிய விசாரணை ), சந்தோஷம் (மனநிறைவு) மற்றும் சத்சங்கம் (சத்விசாரணை செய்பவர்களுடன் கூட்டுறவு). புத்திசாலித்தனமானமாக தேடுபவர் இவற்றின் நட்பையோ அல்லது குறைந்தபட்சம் ஒன்றுடனோ விடாமுயற்சியுடன் வளர்க்க வேண்டும்.

விளக்கம்:

ஆத்மஞானம் பெறுவதற்கு முதல்படி மன அமைதியே, அதிலிருந்து தான் ஆன்மாவை பற்றிய விசாரணை தொடங்குகிறது. அதாவது மனம் ஆன்மாவின் இருப்பிடத்தில் இருக்கும் போதுதான் அது அமைதியுறும். அப்போது மனமே ஆன்மாவை பற்றிய விசாரணையாக மாறுகிறது. சந்தோஷம் என்பதே ஆன்மாவின் இயல்பாக இருப்பதால், ஆன்மாவை பற்றிய விசாரணை பெருக பெருக சந்தோஷமும் பொங்கிக் கொண்டேயிருக்கும். அவ்வாறு பொங்கும் சந்தோஷத்தில் சத்திய நாட்டம் கொண்டவர்கள் இயல்பாகவே சங்கமிப்பார்கள்.

ஆகையால் புத்திசாலித்தனமானமாக தேடுபவர் சத்சங்கத்தை நாடினாலும் அது மனஅமைதிக்கு வழி வகுக்கும். மனஅமைதி பெற முயற்சித்தாலும் அது சத்சங்கத்தில் இயல்பாகவே கொண்டு சேர்த்துவிடும். அத்தகைய சத்சங்கம் கிடைத்தால்…

“ஸத்சங்கத்வே நிர்சங்கத்வம் 

நிர்சங்கத்வே நிர்மோஹத்வம் 

நிர்மோஹத்வே நிச்சலத்துவம் 

நிச்சலத்வே ஜீவன் முக்தி”.

ஆதிசங்கரரின் பஜகோவிந்தம்

மேலான ஞானமுடைய பெரியோர்களிடம் இணைந்தால் இணைவுகள் அற்ற தனிமை கிடைக்கும். தனிமையில் சிந்தித்திருக்கும் போது பந்த பாசங்கள் என்னும் பற்றுகள் விலகும். பற்றுகள் விலகினால் தூய்மையானவன் ஆவாய். தூய்மையானவனாகிய பின்னர் ஜீவன் முக்தி ஏற்படும்.

ஸ்ரீ குருப்யோ நமஹ🙏🏿

Leave a comment