
“தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே!”
திருமூலர் – திருமந்திரம்
பகவான் ஸ்ரீ ரமணமகரிஷியின் உபதேசம் குருவை பற்றி, “குரு என்பது உடல் வடிவம் அல்ல. எனவே குருவின் உடல் வடிவம் மறைந்த பின்னரும் தொடர்பு நிலைத்திருக்கும்”.
உரு; என்பதற்கு ‘உடல் மற்றும் உருவமுள்ளது’ என்று பொருள்கள் உள்ளன. எண்ணுபவரின் எண்ணங்களில் முதல் முதல் வெளிப்பாடுக் காட்சியாக அமைவது அவரவர்களின் உருவமே ஆகும்.
குரு; என்பதற்கு ‘ஞான ஆச்சாரியன்’ என்று பொருள் உள்ளது. அதாவது ஞானத்தை வெளிப்படுத்தும் எவ் உருவத்திற்கும், உலகப்பொது திருநாமமாக விளங்கிக் கொண்டிருக்கும் ‘குரு’ என்பது மிகவும் சாலப்பொருந்தும். அவ்வகையில் எண்ணுபவரின் எண்ணங்களில் இருந்து ஞானம் வெளிப்படும் தருணங்களில், அதாவது ரமண மகரிஷி வாக்கின்படி பௌதீக குருவுருவம் மறைந்தாலும் சிந்திப்பவரின் “உருவுனில் உருவாக குருவுருவே வெளிப்பட்டு, ஞானத் தெளிவை அளித்துக் கொண்டே இருக்கும்.
எனவே, ஒருவரது தெளிவின் தூயஉணர்வில், குருவுக்கும் சீடருக்கும் இடையிலான தொடர்பு என்றென்றும் நிலைத்திருக்கும்.
ஸ்ரீ குருப்யோ நமஹ🙏🏿

