You are that! -“The veil remover”

‘ஆங்காரம்’ என்பது கடவுளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் உள்ள ஒரு முக்காடு . – ரூமியின் முத்துக்கள்

‘ஆங்காரம்’ உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத் தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம், என்பது பத்திரகிரியாரின் புலம்பல்.

‘ஆங்காரம்’ என்பது மெய்,வாய்,கண், காது, மூக்கு என்னும் ஐம்புலன்களும் பொறிகளாக மாறி சுட்டெரிக்கும் தன்மையே ஆகும். இது ஒருவரின் விழிப்புநிலையில் மட்டுமே செயலாக்கத்தில் இருக்கும். தூக்கநிலையில் ஐம்புலன்களும் பொறிகளாக மாறாததால், சுட்டறிக்கப்படாமல், அதன் காரணாம் ‘ஆங்காரம்’ உள்ளடங்கியே இருக்கும்.


ஆகையால் ஒருவர் தமது விழிப்பு நிலையில் தம் தூக்க நிலையில் உள்ளது போன்றே ஐம்புலன்களும் பொறிகளாக மாறாமல், அதாவது பொருட்களின் மீதுள்ள பற்றே பொறிகளாக மாறி ஐம்புலன்களையும் சுட்டெரித்து ‘ஆங்காரம்’ மாக வெளிப்படுத்துகிறது, அவ்வாறு இன்றி சுட்டும்தன்மையை அறுத்தால், ‘ஆங்காரம்’ வெளிப்படாமல் உள்ளடங்கிய இருக்கும். அந்நிலையில் தூக்கத்தில் அனுபவிக்கும் சுகத்தையே, தூங்காமல் விழிப்பு நிலையிலும் அனுபவிக்காலாம். அதாவது ‘ஆங்காரம்’ அற்ற அந்நிலையில் கடவுளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் உள்ள முக்காடு (மறைப்பு) முழுவதும் நீங்கப் பெற்ற நிலையில் அருட்பெருஞ்ஜோதியின் தரிசனம் கிட்டும்.

“கடவுளர் மறைப்பைக் கடிந்தவர்க் கின்பம் அடையுறத் தெருட்டும் அருட்பெருஞ் ஜோதி” அகவல்:847
அதாவது தம்முள்ளேயே விளங்கிக் கொண்டிருக்கும் அருட்பெருஞ்ஜோதியின் தரிசனத்திற்கு தடையாக இருக்கும் மறைப்பை (முக்காட்டை) கடிந்தவர்க்கு, ஜோதி தரிசனம் அளித்து அளவற்ற இன்பத்தை கொடுக்கும்.

ஸ்ரீ குருப்யோ நமஹ🙏🏿

Leave a comment