“மூன்றாவது கண்“

மற்ற கண்ணால் பார்க்க இரண்டு கண்களையும்
மூடு – ரூமி

“காட்சியும் காணாக் காட்சியும் அதுதரும்
ஆட்சியும் ஆகிய அருட்பெருஞ்ஜோதி”
அருட்பெருஞ்ஜோதி அகவல்: 153-154

அருட்பெருஞ்ஜோதி ஒரே நேரத்தில் காட்சியாகவும் மற்றும் காணப்படாததாகவும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.

அதாவது எவரொருவர் விழிப்பு நிலையில் காணப்படும் காட்சியாகவும் மற்றும் உறக்க நிலையில் காணப்படாததாகவும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் தம் உருவை ஒரே நேரத்தில் தம் இருகண்களால் உணரும்போது, அத்தகையவரின் மூன்றாவது கண், அவருள்ளேயே ஆட்சியாக விளங்கிக்கொண்டிருக்கும் அருட்பெருஞ்ஜோதியின் காட்சியை காண்பிக்கும்.

ஸ்ரீ குருப்யோ நமஹ🙏🏿

Leave a comment