समदृष्टिः “சமத்ருஷ்டி”

 “யோகத்தில் உறுதிபெற்று எங்கும் சமதிருஷ்டி உடையவன் தன்னை எல்லா உயிர்களிடத்தும், எல்லாஉயிர்களைத் தன்னிடத்தும் இருப்பதாக காண்கிறான்”. பகவத்கீதை:அத்தியாயம் 6: ஸ்லோகம் 29:

समदृष्टिः “சமத்ருஷ்டி” என்பது சமஸ்கிருத வார்த்தையாகும், இது அனைவரையும் சமமாக அல்லது பாரபட்சமின்றி பார்க்கும் செயல் என்று பொருள். விருப்பு வெறுப்பு இல்லாத போதுதான் பாரபட்சமற்ற பார்வை கிடைக்கும்.

பிரஹத்ஹாரண்யகோ உபநிஷத்: 2-5-19 ல்
ரூபா ரூபம்–ப்ரதிரூபோ–பபூ வ தத்ஸய ரூபம் ப்ரதிசஷ்ணாய!
அப் பரம்பொருள் ஒவ்வொரு உருவத்திலும் அதே உருவமாகவே, தூய உணர்வாகவே ஆயிற்று. அவ்விதம் உருக்கொண்டது தன்னை வெளிகாட்டுவதற்காக! என்று கூறப்பட்டுள்ளது.

மனித வடிவில் உள்ள ஒவ்வொருவரும் தம் உருவமாகவே விளங்கிக் கொண்டிருக்கும் அத்தூய உணர்வை, பரம்பொருளை,  தவறாக தங்கள் தனித்துவமான மனம் சம்பந்தப்பட்ட  எண்ணங்களாகவே கருதுகின்றனர். உண்மையில் தூய உணர்வு, ‘மனம் சார்ந்த விஷயங்களை விட நுண்ணியதாகக் கருதப்படுகிறது, அது எல்லா உயிர்களிலும் பரவியதாகவும், எங்கும் நிறைந்ததாகவும், அனைத்து செயல்பாடுகளுக்கும் ஆதாரமான கட்டளையாகவும் இருந்து கொண்டிருக்கிறது.

தூய உணர்வுக்கும் (pure consciousness), மனதிற்கும் (mind) உள்ள வேறுபாடு:

அவரவர்களின் உருவமாகவே இருக்கும் இத்தூய உணர்வு ஒருவரால் உணரப்படும் போது, எல்லா உயிர்களிடத்தும் அதே தூய உணர்வே தென்படும். மேலும் அதே தூய உணர்வாகவே தாமும் இருந்து கொண்டிருப்பதையும், அதன் கட்டளையாலே தாமும், மற்ற எல்லா உயிர்களும்  ஒவ்வொரு கணமும் இயக்கப்பட்டு கொண்டிருப்பதையும் உணரும்போது. அதில் விருப்பு வெறுப்பு இல்லாத சமதிருஷ்டி என்னும் சமமாக பார்க்கும் பார்வை, அதாவது இயங்கக்கூடிய அனைத்திலும், ‘எல்லாம் அவன் செயல்’ என்றே பார்க்கும் உணர்வு ஏற்படுகிறது.

மாறாக மனம் என்பது முதலில் பிற உயிர்களின் வழியாகவே தான் அறியப்படுவதால்,  அதை அறிபவர்களின் உருவானது சூழ்நிலைக்கு தக்கவாறு விருப்பும், வெறுப்பும் கலந்த எண்ணங்களாக  உருவெடுக்கிறது.
ஸ்ரீ குருப்யோ நமஹ🙏🏿

The true yogis sees the Self in all beings, and all beings in the Self; he sees the same everywhere.

Everyone in human form wrongly interprets the pure consciousness that pervades their body as thoughts that their individual mind manifests.  In fact, pure consciousness is considered finer than ‘mind matter’ and is considered pervasive in all beings, omnipresent, and omniscient.

Difference between consciousness and mind:

 In the expression of pure consciousness, which is in everyone’s form, the same pure consciousness is felt in all beings as well. When we recognize that we are all part of the same pure consciousness, it leads to the creation of a equivalent visionary without preferences or dislikes.

On the contrary, since the mind first manifests itself through other living beings, it takes form in the shape of those who know it as thoughts mixed with likes and dislikes according to the situation.  समदृष्टिः “SamadRUSTi” is a Sanskrit word that means the act of looking at all equally or impartially. The sight of impartiality will be gotten only in the absence of likes and dislikes.

Shri Gurupyo Namaha🙏🏿

Leave a comment