“தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்”

“தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான
தூயவன் ஜோதி நாராயணன்”

நான், தூய சக்தியாக, இந்த உடலுக்கு ஒளி கொடுப்பது போல, உலகிற்கு நானும் ஒளி கொடுக்கிறேன். இதன் விளைவாக, முழு உலகமும் என்னுடையது; மாற்றாக, எதுவும் இல்லை.”
அஷ்டவக்ர கீதை, அத்தியாயம் 2,

ஒளிரும் உடலாகத் தன் சொந்த வடிவத்தை முடிவில்லாமல் தியானிக்கும்போது, அது உள்ளிருந்து வெளிச்சம் தரும் நித்திய சக்தியாக மாறுகிறது. ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாட்டின் படி (E = m c2), ஒளிர்வு (c2) மற்றும் உடல் நிறை (m) ஆகியவை இணைந்தால், அவை தானாகவே ஒரு நித்திய ஆற்றலை (E) உருவாக்குகின்றன.
எடுத்துக்காட்டாக பிரகலாத சரித்திரம், இதில் பரம்பொருளை(energy) பிரகலாதன்(mass) சிந்னையாக(c²) பகவானை நினைக்கும்போதே, அவனுள்ளும் அந்த பிரம்மமே இருப்பதாலே, எல்லா இடங்களிளும் தான் வியாபித்து இருப்பதை தூணிலிருந்தும், துரும்பிலிருந்தும் வெளிப்பட்டு, சக்தி சொருபத்தை காட்டினான்.
மனத்தின் ஒளியான சிந்தனா சக்தி (c2) அளப்பரிய வேகம். தமிழில் mass என்பது நிறை, அதுவே ஒவ்வொரு தேகத்தின் நிறை. நிறைதல் பரம்பொருளின் வெளிப்பாடு,அது நரசிம்மன் எனும் energy ஆக வெளிப்பட்டது.
அதாவது பிரகலாதன்(m) என்னும் தேகத்தில் மனத்தின் ஒளியான அளப்பரிய வேகமான சிந்னையாக(c²) நாராயணன் விளங்கியத்தால், அது mc2=E அதாவது அளப்பரிய சக்தியாக(E) தூண், துரும்பு என்று எங்கும் நிறைந்த நரசிம்ம அவதாரமாக வெளிப்பட்டது.

ஸ்ரீ குருப்யோ நமஹ🙏🏿

பின்குறிப்பு:

பிரகலாதனிடம் இரண்யகசிபு இவ்வாறு கேட்கிறார், உன் நாராயணன் எங்கிருக்கிறான் என்று? இவ்வாறு கேட்ட அக்கணமே பிரகலாதன் பதில் கூறும் முன்பே அவனுள் உறைந்திருக்கும் பரமாத்மா அளப்பரிய சக்தியாக தூணிலிருந்து, துரும்பு வரை நீக்கமற எல்லா இடங்களிலும் நரசிம்ம மூர்த்தியாக வியாபித்து, பிரகலாதன் எந்த இடத்தை சுட்டிக் காண்பித்தாலும்  அதிலிருந்து  வெளிப்படும் நிலையில் நிற்கிறார். அளப்பரிய சக்தியாக பரமாத்மாவை பிரகலாதன் தன்னுள் ஆகர்ஷித்துக் கொண்டதாலேயே,

“அவன் எங்கும் இருக்கிறான் தந்தையே! இந்த மாளிகையிலும் உள்ளான், இங்குள்ள அனைத்திலும் உள்ளான்; பேசும் என்னிலும் உள்ளான், கேட்கும் உங்களிலும் உள்ளான்; இங்கு உள்ள அனைவரிடத்தும் இருக்கிறான்; அவன் பெரிய தூணிலும் இருப்பவன், சின்னஞ்சிறு தூசியிலும் இருப்பவன்!!”

என்று இரண்யகசிபு கேட்ட கேள்விக்கு பிரகலாதன் இவ்வாறு பதில் கூற முடிந்தது.

இரண்யகசிபு தூணை மட்டுமே  தேர்ந்தெடுத்ததால் நாராயணனின் சக்தி எங்கும் வியாபித்திருந்தாலும், தூணிலிருந்து மட்டுமே நரசிம்ம அவதாரமாக வெளிப்பட்டது.

மாறாக இரண்யகசிபு என்னில் எங்கு உள்ளான் என்று தன்னையே சுட்டிக் காண்பித்து கேட்டிருந்தால்? அக்கணமே பரமபதம் எய்திருப்பான்!

Leave a comment