“What you think, you become”

-புத்தரின் போதனை:

-நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ, அதுவாக மாறுகிறீர்கள்.

-நீங்கள் என்ன உணர்கிறீர்கள், நீங்கள் ஈர்க்கிறீர்கள்.

-நீங்கள் கற்பனை செய்வதை நீங்கள் உருவாக்குகிறீர்கள்.

Interpretation:

1.நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ, அதுவாக மாறுகிறீர்கள்: புத்தரின் போதனை,

2.பகவத் கீதை: அத்தியாயம் 8: ஸ்லோகம் 6

“குந்தியின் புதல்வா,  இறுதி காலத்தில் எப்பொருளை எண்ணிக்கொண்டு ஒருவன் உடலை உகுக்கின்றானோ, எப்போதும் அப்பொருளைப் பாவிப்பவனாகி அவன் அதையே அடைகிறான்”.

ஒருவன் தன் வாழ்நாள் முழுவதும் எதன் மீது அதிகம் பற்று கொள்கிறானோ, அத்தன்மை கொண்ட உயிரினமாகவே அவனது அடுத்த பிறவி அமைந்துவிடும் என்பது கீதையின் இந்த ஸ்லோகத்தின் உட்பொருள், மற்றும் புத்த போதனையின் உட்பொருள்.

இதற்கு ஜடபரதர் கதையை உவமானமாக எடுத்துக் கொள்ளலாம்.

ஜடபரதர், (Jadabharata) ஒரு இந்து புராணக் கதாபாத்திரம். இவர் பரதன் என்ற பெயரில் நாடான்ற மன்னர். காட்டில் தவ வாழ்வு மேற்கொள்ள நாட்டைத் துறந்தார். தவ வாழ்க்கையில், காட்டில் தாயை இழந்த மான் குட்டியை எடுத்து வளர்த்தார். மான் குட்டி மேய்ச்சலுக்கு சென்று திரும்பும்வரை அதன் நினைவாகவே இருந்து தவவாழ்வினை மறந்தார். மரணத்தறுவாயிலும் பரதர் மான் குட்டியின் நினைவாகவே இறந்தார். இதனால் மறுபிறவியில் பரதர் ‘மானாக’ பிறந்தார். தான் மானாக பிறந்த காரணத்தை உணர்ந்தார் பரதர், அதற்கடுத்த பிறவியில் பிறக்கும் போதே ஆத்ம ஞானியாகவே தம்மை பிறப்பித்துக்கொண்டு அதன் மூலம் ‘பிறவாமை’ எனும் பெரும் பெற்றை அடைந்தார்.

அது போன்றே இனி வரும் அடுத்த பிறவியை எவரொருவரும் தாங்கள்  நினைத்தபடியே, கற்பனை செய்தபடியே  தங்களை தாங்களே உருவாக்கிக் கொள்ளலாம், அல்லது பிறவிப் பெருங்கடலை நீந்தியவர்களை இடைவிடாது சிந்திப்பதின் மூலம், இறைவனடி சேர்ந்து மீண்டும் பிறவாநிலையை எய்தலாம் அல்லது  புத்தரைப் போன்று ஒன்றுமில்லாத பரந்த விழிப்புணர்வை இடைவிடாது உணர்வதின் மூலம் புத்தராகவே ஆகலாம் என்பதும் இதிலிருந்து புலனாகின்றது.என்பதும் இதிலிருந்து புலனாகின்றது.

In fact Buddha did not differentiate Hinduism; instead, as stated in the Bhagavad Gita, Chapter 8, Shloka 20: “But beyond this unmanifested space, there is yet another unmanifested eternal space, which does not perish when all beings perish,” this could be understood as pure space, which Buddha experienced and became, and thus he could be considered an avatar of Lord Vishnu.

Sri gurupyo namaha 🙏🏿

Leave a comment