
பிரபஞ்சம் என்பது சமுத்திரத்திற்கு ஒப்பாகும், அது ஏதும் இல்லாத வெட்ட வெளி (Eternal space), அதுவே குரு ஸ்தானமாக இருக்கிறது. இத்தன்மையின் ஒவ்வொரு துளியே, வெளியாக (Space) ஒவ்வொருவரின் தேகத்துக்குள்ளும் விளங்கிக் கொண்டிருக்கிறது.
“வெளிக்குள் வெளி உள் கடந்து சும்மா இருக்கும் சுகம் இன்று வருமோ நாளை வருமோ மற்றென்று வருமோ அறியேன்” என்பது வள்ளலாரின் திருவருட்பா பாடல்.
அதாவது ‘குரு’ என்னும் ‘வெட்ட வெளி’ சிஷ்யனின் தேகத்துக்குள் இருக்கும் ‘வெளி உள்கடந்து’ அதாவது குரு என்னும் சமுத்திரம் சிஷ்யனின் உள்ளிருக்கும் ஓர் துளியுடன் கலந்து ‘சும்மா இருக்கும் சுகம்’ என்பது பொருள் ஆகிறது.
“ஸத்யஸ்ய ஸத்யமிதி” என்பது உபநிஷத்தில் கொல்லப்பட்டுள்ள ரகசிய நாமம் ஆகும். அதற்கு பொருள் ‘ஸத்தியத்திற்கு ஸத்தியமாக பிரம்மம் உள்ளது’ என்பதாகும். “ஸத்யஸ்ய” என்னும் வெளி மூச்சின் சப்தத்தில் குருவானவர் பிரபஞ்சமாக, சமுத்திரமாக, உருவம் ஏதும் இல்லாத வெட்ட வெளியாக, அதாவது Eternal space ஆக இருக்கிறார்.
அச்- சப்தத்தின் தன்மை “ஸத்யமிதி” என்று உள்வாங்கும் சிஷ்யனின் உள் மூச்சின் சப்தத்தில், இறைவனாக, குருவாக, அதாவது சமுத்திரம் ஓர் துளியுடன் கலப்பது போல, வெட்ட வெளி (That is vacuum of the Eternal space) இத்தேகத்தில் இருக்கும் உள்வெளி (That is vacuum of the Internal space) யுடன் இரண்டற கலந்து, உள்ளும் புறமும் இல்லாத, உருவமற்ற ஒரே வெட்ட வெளியாக (That is light of the Eternal space) ஆக ஆகும் நாள் “என்று வருமோ அறியேன்”
ஶ்ரீ குருப்யோ நமஹ🙏

