” நேர்மையின் நல்லது, கெட்டது மற்றும் அசிங்கமானது பற்றிய ஓர் கருத்து”
மேற்கோள்: “அறிவு இல்லாத நேர்மை பலவீனமானது மற்றும் பயனற்றது; நேர்மை இல்லாத அறிவு ஆபத்தானது மற்றும் பயங்கரமானது.” சாமுவேல் ஜான்சன்
விளக்கம்: அறிவு என்பது அறிபவர் மற்றும் அறியப்பட வேண்டிய ஒன்றின் சங்கமம். அறிபவன் இன்றி அறிவு இல்லை என்பதை இது குறிக்கிறது!
அறிபவர் மட்டுமே ‘நேர்மையின்’ தன்மையை தீர்மானிக்கிறார். அதாவது, ‘நேர்மை’ என்ற குணம் இல்லாத அறிபவனிடமிருந்து உருவாகும் அறிவு ஆபத்தானது மற்றும் மோசமானது. மறுபுறம், ‘நேர்மை’ என்ற குணத்திலிருந்து வெளிப்படும் அறிவு ஆற்றல் வாய்ந்தது மற்றும் மதிப்புமிக்கது. இதற்க்கு மேலும், ‘நேர்மை’ என்ற பண்பு பற்றிய விழிப்புணர்வே இல்லாத ஒருவர் அறிவை முற்றிலும் அர்த்தமற்றதாக ஆக்குகிறார்.
முடிவில், “நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுவாய் நின்ற நடுவே” என்று வள்ளல் பெருமான் திருவருட்பாவில் கூறியது போல், நல்லவர், கெட்டவர், மற்றும் அசிங்கமானவர்களுக்கிடையே வல்லமையாகத் தூய அறிவு மாறுபடாமல் நிலைத்து நிற்கிறது.
இதன் விளைவாக, அறிவின் வெளிப்பாடாக ஒவ்வொருவரிடமிருந்து வெளிப்படும் வலிமை, ஆபத்து மற்றும் அர்த்தமற்ற தன்மை ஆகியவற்றின் அடிப்படையில், அத்தகையவர்களது நேர்மையின் தரத்தை மதிப்பீடுக்கொள்ளல்லாம்.
ஸ்ரீ குருப்யோ நமஹ🙏🏿

