
எல்லாப் பிறப்புக்களுமே ஆண்மை மற்றும் பெண்மை கலந்த பிறப்புக்களே. அதாவது பெண்ணினுள் ஆண்தன்மையும், ஆணினுள் பெண்தன்மையும் கலந்தே இருக்கும். இவ்வாறு கலக்காமல் ஆணினுள் ஆண்தன்மை மட்டுமே கலந்த பிறப்பு முருகப் பெருமானின் பிறப்பு. உலகின் ஒரே ஆண்மை மட்டுமே நிறைந்த ஆண்மகன்.
எனினும் சூரபத்மனை வதம் செய்ய ஆண்மை மட்டுமே இருந்தால் போதாது என்பதால்தான் சக்தி, வேலாக அதாவது பெண்மையாக முருகப்பெருமானிடம் கலந்தால்.
இந்த கலவையை உணர்ந்து செய்யப்படும் செயல்கள் எதுவாயினும் அது அனைவருக்கும் வெற்றியே அளிக்கும் என்பதால் தான் சக்திவேல் என்பது முருகப்பெருமானிடம் வந்த பின்னர் வெற்றிவேலாக, வீரவேலாக ஆயிற்று.
ஓம் சரவணபவ நம 🙏

