
அருட்பெரும் ஜோதி, தனிப்பெரும் கருணை.! தனிப்பெரும் கருணை.! என்பது எவர் ஒருவரால் ‘அருட்பெருஞ்ஜோதியுடன் மட்டுமே தனித்து இருக்கும்‘ ஆற்றல் உள்ளதோ அத்தகையவருக்கே தனிப்பெரும் கருணையாக, அருட்பெருஞ்ஜோதி யானது அருள் பாலிக்கும்.
எனவே தான் வள்ளல் பெருமான் ‘தனித்திரு’ என்னும் உபதேசத்தை வழங்கி உள்ளார். அதாவது ‘தனித்திரு’ என்பதற்கு ‘யாருடன் தனித்து இருப்பது’ என்று பொருள் கொண்டால், ‘தனித்திரு’ என்பதன் மெய்ப்பொருள் விளங்கும். மேலும் ‘தனிமை’ என்பது வேறு ‘தனித்திரு’ என்பது வேறு, இரண்டும் வெவ்வேறு விதமான பண்புகள் கொண்டவை. ஒன்று ‘வெறுமை‘ நிறைந்தது மற்றொன்று ‘இருள்’ நிறைந்தது .
‘தனிமையில், வெறுமை‘ எனும் பண்பே உருவாகும், அந்த வெற்றிடத்தை நிரப்ப இயல்பாகவே மனமானது வெளி உலக விஷயங்களையே நாடிச் செல்லும். மாறாக ஒருவர் ‘தனித்திரு‘ என்பதன் மெய்ப்பொருளை அறிந்து அதை நாடிச் செல்லும்போது… உருவாகும் இருளினை,
அவரவர் உள்ளத்தில் அசையாத ஜோதியாக ஒளிர்ந்து கொண்டிருக்கும் அருட்பெரும் ஜோதி, அவ்-இருளினை முழுமையாக ஆட்கொண்டு தனிப்பெரும் கருணையாக விளங்கும்.
திருச்சிற்றம்பலம் 🙏

