
“நெறி நிற்கும் நல்லறிஞனுடைய மனதையும் கொந்தளிப்புள்ள இந்திரியங்கள் பலவந்தமாக பற்றியிழுக்கின்றன“
பகவத்கீதை: ஸாங்கிய யோகம்: ஸ்லோகம்: 60
நெறி நிற்கும் நல்லறிஞனுடைய மனதில் எவ்வாறு கொந்தளிப்புள்ள இந்திரியங்கள் உண்டாகும்?
கொந்தளிப்புள்ள
இத்தகையோரின் செயல்பாடுகள் யாவும் தீயநெறி பக்கமே சார்ந்து இருப்பதால், ‘துஷ்டர்கள்‘ என்னும் பொதுப் பெயரிலேயே இவர்கள் அடையாளம் காணப்படுவார்கள்.
“கல்லாத மூடரைக் காணவும் ஆகாது
கல்லாத மூடர் சொல் கேட்கக் கடன் அன்று
கல்லாத மூடர் கருத்தறியாரே“. என்று திருமூலர் தம் திருமந்திரத்தில் சொல்லியுள்ள கல்லாத மூடர்கள் என்பதும் கூட ‘இத்–துஷ்டர்களை‘ குறித்தே யாம்!
இத்தகைய ‘துஷ்டர்களை கண்டால் தூர விலகி இருத்தல்‘ வேண்டும். அதாவது கல்லாத இம் மூடரைக் காணாமல் இருப்பதும், எது நன்னெறி, எது தீயநெறி என்னும் கருத்தறியாமல், எல்லா நெறிகளையும் கற்றறிந்தது போன்று பேசும் கல்லாத இம்மூடர் சொல் கேட்காமல் இருப்பதும், நெறி நிற்கும் நல்லறிஞர்களின் செயல்பாடாக இருக்க வேண்டும்.
அஃதின்றி இத்தகைய துஷ்டர்களின் மனத்தினில் குடிகொண்டிருக்கும் கொந்தளிப்புள்ள இந்திரியங்களின் தன்மைகளை பற்றி அறிந்து கொள்ளாமல், அதாவது சேரிடம் பற்றி ஆராய்ந்து அறியாமல், அவர்களைக் காணவும், கருத்தறியாத அவர்கள் சொல் கேட்கவும் செய்தால்…
அத்தகையோரின் மனங்களில் குடிகொண்டிருக்கும் கொந்தளிப்புள்ள இந்திரியங்கள், அதனுடன் சேர்ந்த நெறி நிற்கும் நல்லறிஞனுடைய மனதையும் பலவந்தமாக பற்றி இழுத்து தீயநெறிகளில் தள்ளிவிடும் ஆற்றல் கொண்டது என்பதால் “சேரிடம் அறிந்து சேர்“ என்று அவ்வை பிராட்டி தம் ஆத்திச்சூடி மூலமும், திருமூலர் தம் திருமந்திரம் மூலமும் நம்மை எச்சரித்துள்ளார்கள்.
திருச்சிற்றம்பலம் 🙏

