“வள்ளல் பெருமானும் சனாதன தர்மமும்”

1.(தனிமையிலிருந்து)”தனித்திரு” என்பது வள்ளல் பெருமானின் உபதேசம்.

2. தனிமையில் இருந்து அல்ல, தன்னம்பிக்கையால் தனியாக நிர்வகிக்க கற்றுக்கொள்ளுங்கள். ‘தனித்திரு’ என்பதில், எப்போதும் உள்ளுக்குள் இருக்கும் வலிமையை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள். – ரூமி

தனிமையின் மனப்பான்மை என்னவென்றால், அது எப்போதும் மற்ற மூலங்களிலிருந்து மட்டுமே வலிமையைப் பெற முனைகிறது, ஆனால் ‘தனித்திரு’ என்பதில், அது எப்போதும் உள்ளிருந்து வலிமையைப் பெறுகிறது.

“சனாதனா” என்பது ஒரு சமஸ்கிருத வார்த்தையாகும், இது நிரந்தரமானது, என்றென்றும் உள்ளது, மற்றும் நித்தியமானது என்று பொருள்கள் உள்ளன.

ஒவ்வொரு மனிதனுக்கும் இரண்டு வகையான இருப்புக்கள் உள்ளது. ஒன்று அவனது உடலாகத் தோன்றும் இருப்பு, மற்றொன்று “சனாதனம்” என்னும் நிரந்தரமான, என்றென்றும்உள்ளதாக, அழிவற்றதாக, நித்தியமானதானதாக அவனது ‘உயிராக’ அவனுள் இருந்துகொண்டிருப்பது. அத்தகைய ‘உயிரின்’ தன்மைகளை கண்டறியும் வழிமுறைகளை கொண்டதே ‘சனாதன தர்மம்’

ஒரு நபர் தனது புலப்படும் இருப்பான தன் உடம்பை மட்டுமே அறிந்திருந்தால், தனிமை இயற்கையாகவே அவரை ஆக்கிரமிக்கும். மேலும் அத்தனிமையைத் தடுப்பதற்காக, அவர் தன்னை வலுப்படுத்த கூடுதல் வெளிப்படையான மற்ற உடல்களைத் தேடுவார். அதாவது ஒருவரது தனிமையில், சனாதன தர்மம் அறியப்படாததாக ஆகி, அது பல்வேறு வேறுபாடுகள் கொண்டதாகவே ஒருவருககொருவர் தோன்றும்.

மறுபுறம், புத்திசாலி மனிதன் தனிமையை ஏற்றுக்கொள்ள விரும்புகிறான், தனிமையின் மனோபாவத்தை, சனாதன தர்மத்தை அறிவதின் மூலம் ‘தனித்திரு’ என்பதாக மாற்றுகிறான், அதன் மூலம் தனக்குள் எப்போதும் நிரந்தரமானதாக இருக்கும் உயிரின் வலிமையைப் பெறுகிறான். இந்த வலிமை வளர்ந்து நிரந்தர ஆற்றலாக மாறியபின் , ‘தனிமை மற்றும் தனித்திரு’ ஆகியவற்றுடன் அறியப்பட்ட ‘சனாதன தர்மமும்’ கூடவே அவ்- ஆற்றலில் மறைந்து போய் விடும்.

எவ்வாறெனில் ‘தனிமையில் தனித்திருந்து’ உயிரின் ஆற்றலாகவே அதாவது ஜோதி வடிவாகவே மாறினபின் வள்ளலார் தம் அருட்பெருஞ் ஜோதி அகவலில் பாடிய பாடல்,

“ஒன்றென விரண்டென வொன்றிரண் டெனவிவை

யன்றென விளங்கிய வருட்பெருஞ் ஜோதி”

அந்த ஆற்றல் ஒன்றாகவே, இரண்டாகவோ, அல்லது ஒன்றே இரண்டாகவோ, சுட்டும் தன்மை ஏதும் இல்லாமல், அதாவது அறிவு, அறியப்படும் பொருள், அறிபவன் என்னும் பாகுபாடுகள் அற்றதாக, அந்த உயிரின் ஆற்றல் அருட்பெருஞ் ஜோதியாக விளங்கிக் கொண்டிருக்கும்.

அந்த ஜோதியில் அறியப்படாத சனாதன தர்மத்தின் பல்வேறு வேறுபாடுகள் கொண்ட மாயத்தோற்றங்கள் ஆகியவற்றுடன், அதுவரை அறியப்பட்ட ‘சனாதன தர்மமும்’ கூடவே மறைந்து போய் விடுகிறது.

“தோற்றமா மாயைத் தொடர்பறுத் தருளி

னாற்றலைக் காட்டு மருட்பெருஞ் ஜோதி

அருட்பெருஞ் ஜோதி அகவல்:417

திருச்சிற்றம்பலம்🙏

Leave a comment