“Particles without subject and object”

ஜீவன் முக்தியில் விவேக வித்யாரண்ய ஸ்வாமி கூறுகிறார்: ஒருவர் ஜீவன் முக்தாவாக மாறுவதற்கு மூன்று முக்கிய கூறுகள் உள்ளன:

1. தத்வ ஞான (பிரம்மனைப் பற்றிய அறிவு மற்றும் ஒருவரின் உண்மையான அடையாளத்தைப் பற்றிய தெளிவான முன்னேற்றம்)

2. மனம் இல்லைஅமானி பவா.. மனதின் மீது முழுமையான கட்டுப்பாடு
3. வாசனா நாசாமுந்தைய கர்மாக்களை முழுமையாக நீக்குதல்.
இம் மூன்றும் ஒன்றாகும் போதுஅவன் சுதந்திரமானவன் என்றும் துன்பத்திலிருந்து விடுதலை பெற்றவன் என்றும் கூறலாம்.
1. தத்வ ஞான (பிரம்மனைப் பற்றிய அறிவு மற்றும் ஒருவரின் உண்மையான அடையாளத்தைப் பற்றிய தெளிவான முன்னேற்றம்)
ஆதியும் அந்தமும் இல்லா அநாதியாய் விளங்கிக் கொண்டிருந்த தூய உணர்வான ஜோதியின்ஸ்பந்தம் அல்லது பிராணன்என்னும் அசைவின் காரணம்சப்தம்உருவாயிற்று. அதாவது ஜோதியும் சப்தமும் அநாதியாகவே இருந்து கொண்டிருக்கிறது. அவ்வாறே ஜோதியின் பிரதிபலிப்பாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் இப்பிரபஞ்சம் என்னும்
மூலப்பிரகிருதியும் அநாதியாம்.
2. மனம் இல்லைஅமானி பவா.. மனதின் மீது முழுமையான கட்டுப்பாடு
இந்த மூலப்பிரகிருதியானது நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம், மனம், புத்தி, அகங்காரம் இன்னும் எட்டுவித தன்மைகளை உள்ளடக்கியது. பிராணன்(subject) மற்றும் மூலப்பிரகிருதியின் (object) சேர்க்கையால், ஏழு குணங்கள், ஏழு நிறங்கள், ஏழு ஸ்வரங்கள் கொண்ட தமோகுண (object) வடிவாக, பல நாமரூபம் தாங்கிய எண்ணற்ற ஜீவாத்மாக்களாக, அவித்யை
என்னும் அஸத்துடன் கூடி பிரதிபலித்துக் கொண்டு இருக்கிறது.
அவித்யை வடிவான ஜீவாத்மாக்கள் பூர்வ ஜென்ம புண்ணிய பாப கர்மங்களின் அடிப்படையில் எண்ணற்ற ஜீவராசிகளின் வடிவாக தோன்றியும் மறைந்தும் கொண்டிருக்கிறது. இதில் அநேக பிறவிகளில் செய்த புண்ணிய கர்மாக்களின் பலனாக கிடைத்தற்கரிய மானுட வடிவம் தாங்கிய ஜீவாத்மாவாகவும், அதாவது தமோகுணத்துடன் ரஜஸ் சத்வ குணங்களும், இவ்வுலகங்களும், தூய உணர்வான ஜோதியின் பிராணங்களாக அதாவது அசைவுகளாக பிரதிபலிக்கிறது என்னும் ஞானத்தில் மனம் இல்லை.
3. வாசனா நாசாமுந்தைய கர்மாக்களை முழுமையாக நீக்குதல்.
இதில் சத்துவ குணம் மேலோங்கும் ஜீவாத்மாக்களுக்கு
ஆன்ம தாகம் உண்டாகி அதன் காரணம் குருவை நாடும். குருவின் கிருபையால் பிராணன்களின் அசைவுகள் முறையாக அறியப்பட்டு செயல்படும் போது முந்தைய கர்மாக்கள் முழுவதும் நசிந்து போக, பிராணன்களே குருவாகவும், அப்பிராணன்கள் உதித்த தூய உணர்வும் குருவாகவே இருப்பதை உணரலாம்.
இம் மூன்றும் ஒன்றாகும் போது
அவ்உணர்வில் பிராணங்கள், குரு, அறிவு, செயல்பாடுகள், ஜீவாத்மா, பிரபஞ்சம் யாவும் மறைந்து போகும். அத்தகைய அவன் சுதந்திரமானவன் என்றும் துன்பத்திலிருந்து விடுதலை பெற்றவன் என்றும் கூறலாம்.
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏🙏🙏

Leave a comment