God created all human beings only to express love, and that love can be expressed in two different ways. The first is form-based love, and the second is formless love.
The love between a man and a woman, between parents and children, between relations, between friends, and in idolatry is love of form. This kind of love is limited, expectant, and ever-changing.
Formless love is love for the life-breath, knowledge, and consciousness that manifest formlessly in every human form. This kind of love has no boundaries and no expectations. “Pure Shivam” is only an expression of such formless love, which only becomes True Love.
கடவுள் எல்லா மனிதர்களையும் படைத்தது அன்பை வெளிப்படுத்துவதற்காக மட்டுமே, அந்த அன்பை இரண்டு வெவ்வேறு வழிகளில் வெளிப்படுத்தலாம். முதலாவது வடிவம் சார்ந்த அன்பு, இரண்டாவது உருவமற்ற அன்பு.
ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உருவாகும் அன்பு, பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையே, உறவுகளுக்கு இடையே, நண்பர்களிடையே, உருவ வழிபாடுகளில் உருவாகும் அன்பு. இந்த வகையான வடிவம் சார்ந்த அன்பு வரம்புக்குட்பட்டது, எதிர்பார்ப்பு உடையது, மற்றும் எப்போதும் மாறக்கூடியது.
உருவமற்ற அன்பு என்பது ஒவ்வொரு மனித உருவத்திலும் உருவமற்ற தன்மையில் வெளிப்படும் உயிர் மூச்சு, அறிவு, மற்றும் உணர்வு ஆகியவற்றின் மீதான அன்பு. இந்த வகையான அன்பு எல்லையில்லாதது, எதிர்பார்ப்பு அற்றது . “சுத்த சிவம்” என்பது இத்தகைய உருவமற்ற அன்பின் வெளிப்பாடு மட்டுமே, அது மட்டுமே உண்மையான அன்பாகவும் ஆகிறது.
“அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்தி ருப்பாரே”
திருமூலரின் திருமந்திரம்:
திருச்சிற்றம்பலம்🙏🙏🙏

