“ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி”
அகவல்:1580:1584:1588:1594:
அருட்பெருஞ்ஜோதி, ஆற்றல் எனும் சக்தியின் அம்சமாகவே இடைவிடாது எங்கும் எதிலும் தம்மை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறது.
அதாவது எவரொருவர் சக்தியின் வெளிப்பாடாகவே விளங்கிக் கொண்டிருக்கும் அருட்பெரும் ஜோதியின் ஆற்றலை, தம் ஒவ்வொரு சுவாசத்திலும், தம் உடம்பின் வழியாக செயல்படும் பார்த்தல், கேட்டல், நுகர்தல், பேசுதல், உணர்தல், சிந்தித்தல், மற்றும் போக்கு வரவு என இருக்கும் அனைத்து செயல்பாடுகளிலும் இடைவிடாது உணரப் பெறுகின்றாரோ அத்தகையவரே அருட்பெருஞ்ஜோதியின் தனிப்பெரும் கருணைக்கு பாத்திரமாய் விளங்குவார்கள்!
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி 🙏
தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி🙏


