“காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி
ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது
நாதன் நாமம் நமச்சி வாயவே”.
:திருஞானசம்பந்தபெருமான்
வேதங்கள் நான்கு அவை ரிக்,யஜுர்,சாம, அதர்வண வேதங்கள். வேதங்களில் அதிமுக்கியமானது அதன் மகாவாக்கியங்கள். அந்த மகாவாக்கியங்கள் பின்வருமாறு:
1.-பிரக்ஞானம் பிரம்ம (प्रज्ञानं ब्रह्म) – “பிரக்ஞையே(அறிவுணர்வே) பிரம்மன்” (ரிக் வேதத்தின் ஐதரேய உபநிடதம்)
2.-அஹம் பிரம்மாஸ்மி(अहं ब्रह्मास्मि) – “நான் பிரம்மன்” (யஜுர் வேதத்தின் பிரகதாரண்யக உபநிடதம்)
3.-தத் த்வம் அஸி(तत् त्वं असि) – “அது(பிரம்மம்) நீ” (சாம வேதத்தின் சாந்தோக்கிய உபநிடதம்)
4.-அயம் ஆத்மா பிரம்ம (अयम् आत्मा ब्रह्म) – “இந்த ஆத்மா பிரம்மன்”(அதர்வண வேதத்தின் மாண்டூக்ய உபநிடதம்)
‘மெய்’ என்னும் பதத்திற்கு: உண்மை; உடல்; உயிர்; உணர்ச்சி என்று பொருள்கள் உள்ளன. அதாவது வேதம் நான்கிலும் சொல்லப்பட்டுள்ள மகா வாக்கியத்தின் பொருள் யாவும் ‘மெய்’ வடிவான இம்மானுட யாக்கையில் அடங்கப் பெற்றுள்ளது. அத்தகைய இம்மெய்-பொருளாவது என்பது இஃதினில்…..
‘நாதன்’ என்னும் பதத்திற்கு: குரு; இறைவன்; சிவன்; என்று பொருள்கள் உள்ளன. அதாவது வேதம் நான்கிலும் சொல்லப்பட்ட மகா வாக்கியத்தின் பொருள் யாவும் ‘நமசிவாய’ எனும் இவ்-ஐந்தெழுத்து நாமத்தில் அடங்க பெற்றுள்ளதால்…..
குரு இறைவன் அல்லது சிவனின் நாமமாக விளங்கும் ‘நமசிவாய’ எனும் இவ்-ஐந்தெழுத்து மந்திரம், ‘மெய்’ எனும் இவ்வுடம்பில் ‘வாசியாக’ இரண்டறக் கலந்து, அது காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்க ஒலித்தால்?
அவ்வாறு ஓதுவார் மெய்யை – பொருளாக்கி, சிவம் ஜோதி வடிவாய் தம்மோடு இணைத்துக்கொள்ளும்.
திருச்சிற்றம்பலம்🙏🙏🙏

.jpeg)
