“நெய்க்குளம் தரிசனம்”

திருமீயச்சூர் லலிதாம்பிகை அம்மனின் நெய்க்குளம் தரிசனம் நவராத்திரி காலத்தில் மிகவும் பிரசத்தி பெற்றது. விஜயதசமி அன்று கருவறைக்கு முன்பாக 15 அடி நீளத்திற்கு வாழை இலையை பரப்பி அதில் சர்க்கரைப் பொங்கலை பரப்பிடுவர். சர்க்கரைப் பொங்கல் நடுவே குளம் போல அமைத்து அங்கே இரண்டரை டின் தூய நெய்யைக் கொண்டு நிரப்புவர். அதன் பின்னர் கருவறையின் திரையை விலக்கினால் அலங்கரிக்கப்பட்ட அம்மனின் உருவம் நெய் குளத்தில் பிரதிபலிக்கும். இதனை தரிசிப்பவர்களுக்கு மறுபிறவியே கிடையாது என்று நம்பப்படுகிறது.
வழிபாட்டின் விளக்கம்:

பிரஹத்ஹாரண்யகோ உபநிஷத்: 2-5-19 ல்

ரூபா ரூபம்ப்ரதிரூபோபபூ தத்ஸய ரூபம் ப்ரதிசஷ்ணாய!

அப் பரம்பொருள் ஒவ்வொரு உருவத்திலும் அதே உருவமாகவே ஆயிற்று. அவ்விதம் உருக்கொண்டது தன்னை வெளிகாட்டுவதற்காக! என்று கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மானுட யாக்கையுள்ளும் அப் பரம்பொருளாகியலலிதாம்பிகைஆத்ம சொரூபமாக குடி கொண்டிருக்கிறாள். அது போன்று இம் மானுட யாக்கையில் உருகும் தன்மை கொண்டதுமனம்ஒன்று மட்டுமே. நெய் போன்று நன்கு உருகிய நிலையில் மனதை வைத்திருந்தால், ஒவ்வொரு உருவத்திலும் அதனுள் உள்ளிருக்கும் பரம்பொருளாகியலலிதாம்பிகை

அம் மானுட யாக்கை எத்தகைய உருக்கொண்டதோ, அத்தகைய வடிவமாக தன்னை வெளிப்படுத்திக் காட்டி பிறவா நிலைக்கு பாத்திரமாக்கி அருள்புரிவாள். இந்த சத்தியத்தை புரிய வைப்பதற்காகவே இத்தகைய வழிபாடு சான்றோர்களால் இக்கோயிலில் வடிவமைக்கப்பட்டது.

திருச்சிற்றம்பலம்🙏🙏🙏

Leave a comment