You Are That! -“Not a Brahmin”

You are Not a Brahmin


“பிறந்த போது கோவண மிலங்கு நூல் குடுமியும்

பிறந்துடன் பிறந்ததோ பிறந்து நாற் சடங்கெலா

மறந்த நாலு வேதமும் மனத்துளே யுதித்ததோ

நிலம் பிளந்து வானிடிந்து நின்றதென்ன வல்லீரே”.

சிவவாக்கியர் பாடல்:
பொழிப்புரை:

“நிலம் பிளந்து வானிடிந்து நின்றதென்ன வல்லீரே”

பூமியை பிளந்து ஆகாயத்தை இடித்தும் நிற்பது

‘ஓம்’ என்னும் பிரணவ சப்தமே!

“வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை” என்பது பைபிள் வசனம்.

அதுவே ஆத்ம சொரூபம், தோன்றியிருக்கும் இம்-மானுடயாக்கைகள் யாவற்றிற்கும் ‘உயிர் வித்தாக’ இருக்கின்றது. நான்கு வேதங்களும் அதன் மூச்சேயாம். அதுவே ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெருஞ்ஜோதி!
இஃதிலிருந்து வெளிப்பட்ட ‘மனம்’ என்னும் மாயசக்தியே மற்ற அம்சங்களான ‘பிராணன் மற்றும் பஞ்சபூதங்களை’ கொண்டு

இம்-மானுட வடிவங்களை உருவாக்குகின்றது.“மனதின் கெட்டிப்பட்ட தன்மையே தேகமாகும்” என்பது ரமண மஹரிஷியின் வாக்கு. அவ்வகையில் எல்லா மானுட வடிவங்களுக்கும் ‘அருட்பெருஞ்ஜோதியே’ தாயும் தந்தையும் ஆகின்றதால், மனித குலம் யாவுமே “ஒன்றே குலம்” என்றாகின்றது. அருட்பெருஞ்ஜோதி “ஒன்றே தேவனும்” ஆகின்றது!

பின் எவ்வாறு மனிதர்களுக்குள் ‘எம்மதம், எம்இறை எம்குலம்’ என்னும் வேறுபாடுகள் எழுகின்றன? அதற்குமனம்’ தான் காரணமாகின்றது.

அதன் தன்மையே வேறுபாடுகளை உருவாக்குவதுதான். மனமானது, பிறக்கும் போது இல்லாத அடையாளச் சின்னங்களையும், சடங்குகளையும், தம்மால் வடிவமைக்கப்பட்ட இம்மானுட யாக்கைக்குள் எண்ணங்கள் வடிவில் உட்புகுத்தி,மேலும்…

“மறந்த நாலு வேதமும் மனத்துளே யுதித்ததோ”

அதாவது தோன்றிய ஒவ்வொரு மானுடவடிவத்திலும் உயிர் வித்தாக இருக்கும் சுத்த சிவஜோதியின் மூச்சே நான்கு வேதங்களாகவும்

ஒலித்துக் கொண்டியிருக்க…மாயையால் இம்மானுடதேகம் தம் ஆத்ம ஸ்வரூபத்தை மறந்ததின் காரணம், அதனுடனே ஆதி முதலே ஒலித்துக் கொண்டிருந்த வேதங்களும் மறந்து போக, அவ்வாறு மறந்த நான்கு வேதங்களையும் மீண்டும் கற்பதின் மூலம் மனதில் மந்திரங்களாக உதிக்கச்செய்து…
அதன் மூலம் ‘மனமானது’ மனிதர்களுக்குள் ‘எம்மதம், எம்இறை, எம்குலம்’ என்னும் வேறுபாடுகளை தோற்றுவித்து, ‘அங்கும் இங்குமாக பிறப்பும் இறப்புமாக’ அலைக்கழித்துக்கொண்டு இருக்கிறது.
முடிவுரை:

“எம்மத மெம்மிறை யென்ப வுயிர்த்திரள்

அம்மத மென்றரு ளருட்பெருஞ் ஜோதி”

அருட்பெருஞ்ஜோதி அகவல் (221)
திருச்சிற்றம்பலம்🙏🙏🙏

Leave a comment