தோன்றிக்கொண்டே இருக்கும் அலைகளை சமுத்திரம் தொடர்ந்து இடைவிடாது விழுங்கிக் கொண்டே இருப்பது போன்று….
மானுட யாக்கையில் மாயையால் ‘நான்’ என்னும் அகம்பாவத்தோடு தோன்றி கொண்டே இருக்கும் எண்ண அலைகளை, அதே தேகத்தினுள் ஜோதி வடிவாக ஒளிர்ந்து கொண்டிருக்கும் ‘சிவனருள்’ என்னும் சமுத்திரத்தால் தொடர்ந்து இடைவிடாது விழுங்கப் பட்டுக்கொண்டு இருப்பதை உணரப்பெற்றால்…
“சிவன் அருளால் சிலர் தேவரும் ஆவர்
சிவன் அருளால் சிலர் தெய்வத்தோடு ஒப்பர்
சிவன் அருளால் வினை சேர கிலாமை
சிவன் அருள் கூடின் அச் சிவலோகம் ஆமே”.
திருமூலரின் திருமந்திரம்:
திருச்சிற்றம்பலம்🙏🙏🙏


