“In things of magic sound, there is no partition, no number, no individuals. How sweet is the oneness-unearth the treasure of Unity.”
:Rumi Quotes
Meaning of “there is no partition”:
Yes, There is no soul and no body, only the soul.
”ஜீவன் தோன்றி அசையும் போது ‘உயிர் உடம்பு’ என்னும் மாறுபாடு கொண்டது போலவும், அதுவே அசையாத போது ‘உயிரற்ற உடம்பாக’ கருதப்படும். அதாவது ‘அசைகிறது அசையாதது’ என்னும் இவ்விரண்டின் தன்மைகளுக்கு இடைப்பட்ட உள்ள கால அளவே ‘பிரிவினை’ என்னும் சொல்லாகின்றது.
வாஸ்த்துவத்தில் உள்ளது ‘உயிர்’ ஒன்றேயாம். ஜீவனாக தோன்றும் போது அது அசைவுள்ளதாகவும், மறையும்போது அது அசைவற்றதாகவும், அதாவது பிரிவினை கொண்டதாக அறியாமையில் அறியப்படுகின்றது. தன்னை ‘உயிர் உடம்பு’ என்னும் ‘பிரிவினை’ கொண்ட ஜீவனாக கருதிய அறியாமையிலிருந்து….
‘அறிவுக்கு அறிவாய்’ விளங்கும் குருவருளால் விடுபட்டு, ஆதிமுதலே தன்னையும், அனைத்தையும் ‘உயிராகவே’ கண்டு உணரும்
ஞானிகளுக்கே “there is no partition” என்னும் இச்சொல் உரித்தாகும். அதாவது அங்கு அசைவும் இல்லை அசையாததும் இல்லை, தோற்றமும் இல்லை மறைவும் இல்லை.
திருமூலரின் திருமந்திரம்:
“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.


