“கலையாத கல்வியும்” அபிராமி அம்மைப் பதிகம்:
பொதுவாக கல்வி என்பது ஒருவர் நூல்களின் வழியாகவோ, செவி வழியாகவோ அல்லது ஆராய்தல் மூலமாகவோ கற்றுக்கொள்வதையே கல்வி எனக்கொள்ளலாம். ஆனால் இத்தகைய கல்விகள் யாவும் ‘இருக்கு மற்றும் இல்லை‘ என்னும் இவ்விரண்டு தன்மைகளுக்கு உட்பட்டதே யாம்!
அதாவது ‘உண்டு‘ என்று இன்று கற்கப்படும் கல்வி நாளை ‘இல்லாமல்‘ போவதும், அதுபோன்று ‘இல்லை‘ என இன்று கற்கப்படும் கல்வி நாளை ‘இருப்பது‘ போன்றுமாக…
“தன்னையறிய தனக்கு ஒரு கேடில்லை” என்று திருமூலர் தம் திருமந்திரத்தில் சொல்லியபடி, தன்னை அறியும் கல்வி தனையே ‘கலையாத கல்வியாக‘ சுட்டிக் காண்பித்துள்ளார். மேலும் இக் கல்வியை கற்றபின்னர்…
“தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்சிக்கத் தானிருந் தானே”
என்று திருமூலர் சொல்லியபடி, தாம் வேறு கல்வி வேறு என்று இல்லாமல் தாமே அக்–கல்வியாக ஆகிவிட்டபடியால், கலைந்து போகும் கல்வி (தன்மை) என்பது இல்லாமலேயே போய்விடுகிறது. அபிராமி பட்டர் அம்மையிடம் வேண்டிய ‘கலையாத கல்வி‘ என்பதும் இதுவேயாம்!!

.jpeg)
